Rasi Palan This Week: துலாம் ராசிக்கு குருவின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்.. முதலீடுகளில் கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான ஆவணி 30 முதல் புரட்டாசி 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

thulam-weekly-rasi-palan-what-kind-of-benefits-libra-thulam-people-will-get-from-september-15-to

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் விரையங்களை சுப விரையங்களாக மாற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் துணையுடன் இருந்த மனக் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் காலகட்டமாக இருக்கும். உறவுமுறையில் இருந்த கஷ்டங்கள் எல்லாம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். மனம் விட்டுப் பேசும் சூழல் ஏற்படும். பிள்ளைகளின் மேல் இருந்த சங்கடங்கள் எல்லாம் தீரும். நல்ல நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்குத் துணையாக இருந்து பாதுகாப்பை ஏற்படுத்துவார்கள். நீண்ட நாட்களாக இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

உணவு தானம்

யோக பலத்தை அதிக அளவில் பெறக்கூடிய ராசிக்காரர்களின் துலாம் ராசியினரும் ஒன்று விரையங்கள் அதிகளவில் இருப்பதால் புதன்கிழமை தோறும் மதிய வேளையில் ஏழைகளுக்கு சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் அல்லது எலுமிச்சை சாறு தானமாக புரட்டாசி மாதம் முழுவதும் கொடுப்பது உங்களுக்கு எல்லாவிதத்திலும் நன்மைகள் உண்டாகும்.

நம்பிக்கை

புதன்கிழமைகளில் பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை தவிர மற்ற உணவுகளை தானமாக கொடுப்பது ஜெயத்தை ஏற்படுத்தும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் சவால்கள் எல்லாம் நீங்கும் நல்ல காலகட்டம்.

முதலீடுகளில் கவனம்

துலாம் ராசியினருக்கு இதுவரை இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். அடுத்தடுத்து எல்லா வேலைகளும் முடிக்கும் யோகம் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய அளவில் முதலீடு செய்யும்போது குடும்ப ஜோதிடருடன் சேர்ந்து ஆலோசனை செய்துவிட்டு செய்வது நல்லது.

குருவின் பார்வை

குருவின் பார்வை இருப்பதால் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும் யோகம் உண்டு. பண வரவு உண்டாகும். மன நிம்மதி ஏற்படும். மன அழுத்தங்கள் குறையும். துணையிடம் மனம் விட்டும் பேசுவது நல்லது. வெளியில் எங்கேயாவது நடந்து சென்று மனதில் இருப்பதை எல்லாம் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பாசிட்டிவிட்டி

மனதில் உள்ள சோகங்களை எல்லாம் விட்டு விட்டு எப்போதும் சந்தோஷமாக இருக்க முயற்சிப்பது நல்லது. உங்களைச் சுற்றி பாசிட்டிவான சூழலையும், நபர்களையும் வைத்துக் கொள்வது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+