துலாம் ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகப் போகுது
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அனுகூலமும் ஏற்றமும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். உத்தியோகத்தில் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அடுத்தடுத்து நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
தடைகள் நீங்கும்
தடைகள் தவிடுபொடியாகும் காலகட்டமாக இருக்கும். உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். பணத்தை சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடன்கள், முதலீடுகள், பணம் சார்ந்த விஷயங்களில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும்.
சிக்கல்கள் தீரும்
வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கைக்கூடிய வரும் காலகட்டமாக இருக்கும். உத்தியோகத்தில் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் பலரால் பாராட்டப்படும். அனுகூலமும், ஆச்சரியப்படும் அளவிற்கான முன்னேற்றங்களும் நிச்சயமாக ஏற்படும். முதலீடு செய்த விஷயங்களில் இருந்து லாபத்தைக் காண்பீர்கள்.
ஆரோக்கியம்
குறை ரத்த அழுத்தம், அனிமிக், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றில் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மன அழுத்தங்கள் தீரும். எந்த பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கலாம் என்ற மனநிலை ஏற்படும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். எடுத்த காரியத்தில் ஜெயம், நம்பிக்கை ஏற்படும்.
தொட்டது துலங்கும்
இதுவரை தடைபட்டு வந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். லாபம், பண வரவு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் இருந்தவர்கள் இனி தனித்தொழில் தொடங்கி அதில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்வது மன அழுத்தத்தை தீர்க்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications