வாகைபதி நாராயணசாமி கோவில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்..பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீ மன் நாராயணசாமி கோயிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான அன்பு கொடி மக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
அம்பை அருகே வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் இந்த ஆண்டு ஆவணி தேரோட்டத்திருவிழா செப்டம்பர் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து தினமும் அய்யா தண்டில் வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனம், அன்னப் பச்சி, சூரியன், நாகம், பூம்பல்லாக்கு, குதிரை, இந்திரன், காளை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட 11 வாகனங்களில் வீதிவுலா வந்து அன்பு கொடி மக்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.

வாகைபதி நாராயணசாமி கோவில்
முக்கிய நிகழ்ச்சியான 8 மற்றும் 10ம் திரு விழாக்களில் பால்குடம் எடுத்தல், சந்தன குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
விழா ஆரம்பித்த நாள் முதல் தினமும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, பணிவிடை, பால் தர்மம் மற்றும் இரவு 8 மணிக்கு மேல் அன்ன தர்மம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்து வருகிறது.

தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நேற்று மாலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அய்யா ஸ்ரீ மன் நாராயணசாமி எழுந்தருளி கோயிலை சுற்றி பவனி வந்தார். இதில் சுற்று வட்டார பகுதி அன்பு கொடிமக்கள் திரளாக பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

வாகைபதி திருவிழா
நிகழ்ச்சியில் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை, சிங்காரி மேளம் மற்றும் நையாண்டி மேளமும் சிறப்பு வானவேடிக்கையும், சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது. இரவு 11 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை வாகைபதி அன்பு கொடிமக்கள் செய்திருந்தனர்.

நினைத்தது நிறைவேறும்
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வந்திருந்த பக்தர்களுக்கு அய்யா கணக்கு சொல்லப்படும் இந்த கோவிலில் அய்யாவிடம் என்ன முறையிடவும் அது நம்பிக்கையுடன் முழுமையாக நடக்கும் என்பது உண்மை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications