மேஷ ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. தொழிலில் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. இதில் மட்டும் கவனம்
வைகாசி மாத ராசி பலன்: சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
கழுத்துப் பகுதி, சுழுக்கு போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. விஷ்ணு வழிபாடு அற்புதமான பலன்களைத் தரும். வார்த்தைகளில் ஆக்ரோஷத்தை தவிர்ப்பது நல்லது. யாராவது ஏதாவது சொன்னாலும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். பழைய கடன்கள், பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாகத் தீரும். முதலீடுகள் செய்யத் தொடங்குவீர்கள்.
தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களுடன் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளலாம் என்று நினைத்ததெல்லாம் தள்ளிக் கொண்டே போயிருக்கும். இனி அதையெல்லாம் முடிப்பீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். தொழில் ரீதியாக இருந்த பாதிப்புகளில் இருந்து நிவர்த்தி உண்டாகும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும்.
வாகனத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனை பரிபூரணமாக நிவர்த்தி ஆகும். யோகமும், அனுகூலமும் காணப்படக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் பூதக்கண்ணாடி ஆராய்ச்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளை அரவணைத்துக் கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்துகொடுப்பது நல்ல பலன்களைத் தரும்.
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். வண்டி வாகனம் மாற்றங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை நிவர்த்தி செய்வீர்கள். தைரியம், தன்னம்பிக்கை படிப்படியாக ஏற்படுவது கண்கூடாகப் பார்க்கலாம். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், திடீர் கெளரவம், திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
நன்றாக ஓய்வு எடுப்பதற்கும் மன மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய இடத்திற்கும் செல்வது சந்தோஷமான மனநிலையை ஏற்படுத்தும். விஷ்ணு வழிபாடு, குலதெய்வ வழிபாடு அபரிமிதமான நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications