கடக ராசிக்கு தடைகள் தவிடு பொடியாகும்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. தொட்டதெல்லாம் ஜெயம்
வைகாசி மாத ராசி பலன்: சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு புதன்கிழமையில் மதிய வேளையில் உணவு தானம் செய்வது நல்ல பலன்களைத் தரும். வியாபாரம், தொழிலில் லாபம் உண்டாகும். சந்தோஷம், அனுகூலம், கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய அதிஅற்புதம் உண்டாகும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். கடல் கடந்த பயணங்கள் ஏற்படும்.
எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த தடைகளில் இருந்து எல்லாம் நிவர்த்தி ஏற்படும். புது பொறுப்புகளுக்கு வருவீர்கள். ஏற்றமும், அனுகூலமும் நம்பிக்கையைத் தரும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகொடுக்கக் கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
நீண்ட நாட்களாக இருந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். மேலதிகாரிகளுக்கும், உங்களுக்கும் இருந்த இடைவெளிகள் குறையும். வாகனங்களில் அனுகூலம் ஏற்படும். மன அழுத்தங்கள் அனைத்தும் தீரும். தேக ஆரோக்கியம், சத்ரு விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
ஆனாலும், வங்கிப் பெட்டகத்தில் ஆவணங்களையும், விலையுயர்ந்த பொருள்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நிம்மதியையும், நன்மையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி தரும். புதிய முயற்சிகள் அனைத்தும் ஏற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பொருளாதார விஷயங்களில் ஏற்றத்தைக் காண்பீர்கள். முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். தொழிலில் புதிய புதிய ஐடியாக்களைப் புகுத்தி அதில் வெற்றியையும் காண்பீர்கள். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். எதிரிகள், வம்பு வழக்குகள் அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications