சிம்மாசனத்தில் அமரப்போகும் சிம்ம ராசி.. இனி சிங்கப் பாதை தான்.. வாழ்க்கையே கெத்தாக மாறப்போகுது
வைகாசி மாத ராசி பலன்: சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
யோக பலத்தை அதிகளவில் அனுபவிக்கப் போகிறவர்கள் சிம்ம ராசியினர். தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியா அடுத்தடுத்து அனுகூலங்கள் ஏற்படும். நரம்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 24 வயதைக் கடந்தவர்கள் தேக ஆரோக்கியத்தில், வாகனங்களை இயக்குவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பிள்ளையார் வழிபாடு, காரியசித்தி மாலை மந்திரத்தை ஜெபிப்பது நல்ல பலன்களைத் தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகொடுக்கும். யோகத்தையும், அனுகூலத்தையும் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
கொடுத்த வாக்கை காப்பற்றக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில் சார்ந்த விஷயங்களில் அனுகூலங்கள் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சிம்ம ராசியினருக்கு படிப்பு, உத்தியோகம், வியாபாரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் சட்டென்று விலகும். முதலாளிகளிடம் அவர்களுக்கு ஏற்றவாறு மாறிக் கொள்வது அனுகூல அமைப்பை உண்டாக்கும். அவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications