Rasi Palan This Week: விருச்சிக ராசியை துரத்தும் ஆபத்து – கவனம் மக்களே
வார ராசி பலன்: அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 முதல் ஐப்பசி 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசி மற்றும் விருச்சிகம் லக்னத்தினருக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக இருக்கும். உங்களின் தனிப்பட்ட செல்வாக்கு பெரியளவு உயரும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சுப காரிய தடைகள் விலகும். திருமண முயற்சியில் இருப்போருக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கஷ்டங்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.
அதிர்ஷ்டங்கள்
உறவுகள் வருகையால் மகிழ்ச்சி பிறக்கும். உத்யோகம், தொழிலில் அற்புதமான ஏற்றங்கள் காணப்படும். தொழிலில் விருத்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. கஷ்டங்களை கடந்து செல்லும் வாரம் இது. கடந்த காலங்களில் இழுபறியாக இருந்த நிலை மாறி, எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். உத்யோகம், தொழிலில் இருந்த சிக்கல்கள் முழுமையாக விலகி அதிர்ஷ்டங்கள் கூடி வரும்.
கவனம்
குழந்தைகளிடம் கோபம் வேண்டாம். சிறிய வாக்குவாதம் கூட பெரியளவுக்கு மனக்கஷ்டங்களை கொடுக்கும். அலர்ஜி, சனி தொந்தரவுகளில் அதிக கவனம் வேண்டும். பெண்களுக்கு ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வண்டி, வாகனத்தில் செல்லும்போது அதிக எச்சரிக்கை வேண்டும். எதிரிகள் விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையாக இருப்பது வேண்டும்.
பரிகாரம்
அரசுத்துறை, அரசியல்வாதிகள் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால் செய்யாத தவறுக்கு பொறுப்பேற்கும் நிலை ஏற்படலாம். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றியை கொடுக்கும். வெள்ளிக்கிழமை தோறும் உங்களால் முடிந்தவரை அன்னதானம் செய்ய வேண்டும். அபிராமி அந்தாதியை உச்சரிக்க உச்சரிக்க நல்லது நடக்க தொடங்கும். உங்கள் வீடு அருகே உள்ள முருகன் கோயில் சென்று வழிபாடு செய்வது லாபம் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications