Viruchigam Rasi Palan: விருச்சிக ராசிக்கு காத்திருக்கும் கண்டம்.. வேலையை காப்பாத்திக்கோங்க
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதியான இன்று கார்த்திகை மாதம் துவங்கியுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் ராசியில் சூரியன் வந்திருக்கிறார். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தலைவலி, ஒற்றை தலைவலி, ரத்த அழுத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், பதட்டம், கழிவுப் பாதை போன்றவற்றில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, தேவையில்லாதவற்றை சாப்பிடுவது போன்றவற்றை செய்வர்களுக்கு நெஞ்சு அடைப்பது போன்ற பாதிப்புகளுக்கு கொண்டு சென்றுவிடும்.
ஆரோக்கியம்
எளிமையாக ஜீரணமாகக் கூடிய விஷயங்களை இரவு நேரத்தில் சீக்கிரமே சாப்பிட்டுக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் செல்லும்போது விதிமுறைகளைக் கடைப்பிடித்துச் செல்வது நல்லது. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மேலதிகாரிகள் விஷயத்தில் சூடு, சொரணை எல்லாம் பார்க்காமல் இணக்கமாகச் செல்வது நல்லது.
வழிபாடு
இல்லை நான் தட்டிக் கேட்பேன் என்று வேலை விஷயத்தில் இருந்தால், கண்டிப்பாக வேலையில் இழப்பு ஏற்படும். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் போன்றவற்றுக்கு செல்லும் நிலை ஏற்படும். கார்த்திகை மாதம் உங்களுக்குத் தொந்தரவு தரும் மாதம் என்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். விநாயகர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உங்களுக்கு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை உணவு தானமாகக் கொடுப்பது மேன்மையைத் தரும், சத்ரு நசத்தை உண்டாக்கும். அனுமன் சாலிஷா சொல்லி வருவது நல்லது. உத்தியோகம், வாகனம், இன்கம்டாக்ஸ், ஜிஎஸ்டி போன்றவற்றில் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி உங்கள் காரியத்தை விட்டு விடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவை.












Click it and Unblock the Notifications