Masi Matha Palan: விருச்சிக ராசிக்கு மாசியில் மாஸ் ஆன யோகம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு (Viruchigam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சிவனுக்கு வழிபாடு செய்வது, ஆராதனை செய்வது, இரவு நேரம் கண் விழித்து சிவனுக்கு செய்யக்கூடிய தொண்டு திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கர்மாக்கள் நிவர்த்தியாகும். இந்த மாசி மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கான முழு பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு 4 ஆம் இடமான சுக ஸ்தானம். பணத்திற்கு, பொருளாதாரத்திற்கு பஞ்சமே இருக்காது. உற்பத்தி, தயாரிப்பு சார்ந்த விஷயங்கள், கல், மணல், குவாரி சார்ந்தது, நிலத்திற்கு அடியில் தோண்டி எடுக்கக்கூடிய விஷயம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். நிறைய பேர் பள்ளி, கல்லூரி கட்டும் யோகம் உண்டாகும்.
தொழில்
இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். மத்திய வங்கிகளில் பணியாற்றக் கூடிய வாய்ப்பு ஏற்படும். பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். புரொடக்ஷன் ஹெட், மைனிங் லீஸ், காண்டிராக்டுகள் போன்றவை கிடைக்கும் அமைப்பு உள்ளது. பெரிய பெரிய வாய்ப்புகள் தேடி வரும். மருத்துவமனைகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆரோக்கியம்
இந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான விஷயங்களிலும், இதயம் சார்ந்த விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. குழந்தைகளிடம் மிகுந்த அன்பாக இருப்பது நல்லது. அவர்களிடம் கடுமை காட்டுவது நல்லது. இந்த மாதம் முழுக்க குழந்தைகளை அரவணைத்து கொண்டு செல்வது நல்லது. அவர்களிடம் கோபப்படுவது, பயமுறுத்துவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
திடீர் அதிர்ஷ்டம்
திடீர் அதிர்ஷ்டங்களும் உண்டாகும். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, மண் வாங்குவது, விவசாயம் செய்வது, கால்நடைகள் வாங்குவது, பசுமாடுகள் வாங்குவது போன்ற அபரிமிதமான நன்மைகள் உண்டாகும். மகாலட்சுமியின் அனுக்கிரகம் உண்டாகும். இதயத்தில் பாதிப்புகள் இருப்பவர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது.
பணவரவு
பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். திட்டமிட்டு செய்யும் காரியகங்களில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவது நல்லது. சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 100 சதவீதம் நன்றாக இருக்கும். முருகர் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications