நாலா பக்கமும் சுத்துபோடும் எதிரிகள்.. விருச்சிக ராசிக்கு காத்திருக்கும் வேட்டு
வார ராசி பலன்: புதிய நம்பிக்கை, எதிர்பார்ப்புகளுடன் இந்த வாரம் தொடங்கியுள்ளது. தடைபட்ட காரியங்கள் இந்த வாரத்திலாவது நடைபெறுமா என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கக் கூடிய பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
நம் ராசி பலன்களுக்கு சனி, குரு, ராகு கேது மாறியான கிரகங்களின் அமைப்பு மட்டுமே முக்கியமல்ல. வருடாந்திர பெயர்ச்சியாகும் கிரகங்களை போலவே மாதந்திர பெயர்ச்சியாகும் கிரகங்களின் அமைப்பு முக்கியம். ஒவ்வொரு வாரமும் கிரக நிலைகளில் மாற்ற இருக்கும். ஆனி மாதத்தின் கடைசி மாதமாகும்.

அடுத்த வாரம் ஆடி மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் 7.7.2025 முதல் 13.7.2025 வரையிலான காலகட்டத்தில் 12 ராசிகளுக்குமான வார ராசி பலன்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்தக் கட்டுரையில் விருச்சிகம் ராசிக்கான பலன்களை காணலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியினருக்கு இந்த மாதம் சற்று வாரம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உத்யோகம், தொழிலில் முதலீட்டில் நல்ல லாபம் காணப்படும். பண வரவு நன்றாக இருக்கும். வாக்கு ஸ்தானம் சிறப்பாக உள்ளது. குடும்பம், வெளியிடம் இரண்டிலும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். கடந்த கால பிரச்னைகளில் இருந்து சற்று நிவர்த்தி கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிவர்த்தியாகும்.
எதிரிகள்
உங்களுடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிரிகளாக மாற வாய்ப்புள்ளது. அரசு, அரசியல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்போர் யாரையும் நம்ப வேண்டாம். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் அதிக கவனம் வேண்டும். அவர்களிடம் மோதல் போக்கு ஏற்படுத்த வேண்டாம். உத்யோகம், தொழிலில், கல்வியில் அவ்வபோது சிக்கல்கள் ஏற்படும். மனதின் நிம்மதி பாதிக்கும்.
கவனம்
பொதுவாக விருச்சிகம் ராசிக்கு ஆடி மற்றும் கார்த்திகை மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும். விரைவில் ஆடி மாதம் தொடங்கவுள்ளதை கவனத்தில் வைக்க வேண்டும். கண், நரம்பு, கழுத்து, மயக்கம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். அலுவல், சொத்து சார்ந்து கையெழுத்திடும்போது மிகுந்த கவனம் தேவை.
பரிகாரம்
வார்த்தைகளில் கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் சிந்தித்து பேசுவது நல்லது. குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமலும், பிறர் குடும்ப விவகாரங்களில் உங்களின் தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். வீட்டின் அருகில் உள்ள விநாயகர் மற்றும் ஆஞ்சிநேயர் கோயில்களில் வழிபாடு செய்வதாலும், நரசிம்மர் கவசத்தை கேட்பதாலும் பிரச்னைகளில் இருந்து தீர்வை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications