Rasi Palan This Week: விருச்சிகம் ராசிக்கு 2 லட்டு திண்ண ஆசையா.. அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 13 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Viruchigam Lucky zodiac signs

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். லாபங்கள் அதிக அளவில் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். பணத்தை சேமிக்கத் தொடங்குவீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட அனுகூலங்கள் காணப்படும். பிள்ளைகள் விஷயத்தில் எதற்கெடுத்தாலும் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

அனுகூலம்

தொழில் ஸ்தானத்தில் அனுகூலங்கள் காணப்படும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அதனால், மனதில் நிம்மதி ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். ஏற்றத்தின் அளவு பன்மடங்காக உயரும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

பதவி உயர்வு

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயத்தில் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் பெரிய அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். கடல் கடந்த பயணங்கள் அனுகூலத்தை தரும். கடல் கடந்து இருப்பவர்கள் கூட தாய்நாட்டில் வந்து நிம்மதியாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வருவீர்கள்.

சிக்கல் தீரும்

உறவு முறையில் இருந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் இறங்கி வருவது நல்லது. இல்லை விடாப்படியாகத் தான் இருப்பேன் என்று தர்க்கம் செய்யும் விருச்சிக ராசியினர் கஷ்டப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும். சனிக்கு சூரியன் பார்வை இருப்பதால் பிள்ளைகள் கண்டிப்பாக உங்களுக்கு எதிராக கோபத்துடன் இருப்பார்கள். அவர்களை அரவணைத்துக் கொள்வது. அவர்களுக்கு புத்திமதி சொல்வது போல கட்டளை இடக் கூடாது.

வழிபாடு

வயிறு, முதுகு, முகத்தில் இருக்கும் உறுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவுக்கு ஏற்றத்தை தரும் யோகம் உண்டாகும். உலகளவில் புகழ்பெறும் யோகம் உண்டு. செவ்வாய்க்கிழமை தோறும் அம்மன், பெருமாளை வழிபாடு செய்வது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+