அடித்து ஆடப்போகும் விருச்சிகம்.. அதிர்ஷ்ட காத்து உங்க பக்கம் தான்.. ஒரு விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் அதிகளவில் கிடைக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். முதலீடுகளுக்கு எந்தவித குறையும் இருக்காது. பெற்றோர், வீட்டில் உள்ள பெரியவர்களின் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சமுதாயத்திலும், வீட்டிலும் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் அலர்ஜி, ஒவ்வாமை, சுழுக்கு, முட்டி வலி போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஆடி மாதத்தை விட ஆவணி மாதத்தில் உத்தியோகம், வெளியிடம், தொழில், வியாபாரத்தில் அனுகூலங்கள் காணப்படும். தடைபட்டு வந்த காரியங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறி நினைத்ததை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் அதிக அளவில் உண்டாகும்.
பிரச்சனைகள் நீங்கும்
உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. தாய் வழி, தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும். குடும்பத்தில் பெற்றோர், பெரியவர்கள், ரத்த பந்த உறவுகள், வேற்று மொழி மனிதர்களால் அதிக நன்மையும், சந்தோஷமும் ஏற்படும்.
சிக்கல் தீரும்
அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகளால் பெரிய நம்பிக்கையும், சந்தோஷமும் ஏற்படும். தனிப்பட்ட முறையில் நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் தீரும். எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெறும் காலகட்டமாக இருக்கும். புதன்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்வது அற்புதமான ஏற்றத்தையும், நன்மையையும் தரும். மரண பயம் நீங்கும்.












Click it and Unblock the Notifications