மிதுனம், கடக ராசிக்கு அடிச்ச ஜாக்பாட்.. அதிர்ஷ்டம் கொட்டும்.. ஒரு விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கை
வார ராசி பலன்: பங்குனி மாதத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். அதன்படி கடந்த மார்ச் 29 ஆம் தேதி ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த வாரத்துக்கு பிறகு தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த வாரத்துடன் தமிழ் மாதமான பங்குனி மாதம் நிறைவடைந்து சித்திரை மாதம் பிறக்கவுள்ளது. இந்நிலையில் 07.04.2025 - 13.04.2025 மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகவும், தெளிவாகவும் பார்க்கலாம்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில், பதவி உயர்வு, புதிய வியாபார அமைப்பு, தொழில் அமைப்பு, புதிய படிப்பு அமைப்பு உண்டாகும். அடிவயிறு, கழிவு பாதை, கீழ் முதுகு தண்டு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காலில் அடிபடுவதற்கான வாய்ப்புள்ளது. பழைய கடனைத் தீர்க்கும் உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். தாய் வழி, தந்தை வழி உறவினர் மனம் விட்டு பேசுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.
சுபகாரியம்
நீண்ட நாட்களாக உடல்நிலையில் இருந்து வந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். சுப காரியங்கள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், வியாபார மாற்றம் ஏற்படும். வீடு கட்டுவது, வாசல் மாற்றுவது போன்றவைகளை செய்வீர்கள். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் அனுகூலத்தை தரும். வெள்ளிக்கிழமைதோறும் மதியம் எலுமிச்சை சாதத்தை தானமாக வழங்குவது நல்ல பலன்களைத் தரும். நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும்.
மாற்றம்
துர்கை வழிபாடு அனுகூலமான பலன்கள், ஏற்றத்தை உண்டாக்கும். அரசுத் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் வெளிச்சத்திற்கு வருவார்கள். நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் காலகட்டமாக இருக்கும்.
கடகம் - எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் நீண்டநாட்களாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகளின் சுப காரியத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். தாய் வழி, தந்தை வழி உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தேக ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முருகன் அருள்
முருகர் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது சந்தோஷம் மற்றும் வாழ்க்கையில் ஏற்றத்தை தரும். ஹீமோகுளாபின், ரத்த அழுத்தம், சர்க்கரை, சிறுநீர் பிரச்சனை போன்றவை ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் தர்க்கம் செய்வது, சவால் விடுவதை தவிர்ப்பது நல்லது. கனிவாகப் பேசுவது நல்லது. இல்லையெனில் பிரச்சனைகளைக் கொடுக்கக்கூடும்.
பேச்சில் கட்டுப்பாடு
தாய் தந்தையருக்கே உங்களின் அறிவாளித் தனமான பேச்சு பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புள்ளது. உத்தியோகம், தொழில் எல்லாவற்றிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. விலையுயர்ந்த பொருள்களை குறிப்பாக மற்றவர்களைப் பொருள்களைக் கையாளும்போது அதீத கவனமாக இருக்க வேண்டும். எடுத்த காரியங்களில் ஏற்றம் உண்டாகும். எதிர்பார்க்காத விஷயத்தில் நன்மை ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.
தொழிலில் கவனம்
உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும். யோக பலத்தையும், நம்பிக்கையும் அதிக அளவில் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தனியார் தொழிலில் இருப்பவர்களின் மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யக்கூடும். ஆவேசப்படாமல் இருப்பது நல்லது. வேலையை விட வேண்டும் என்ற தவறான முடிவை செய்யக் கூடாது. வியாழக்கிழமை தோறும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக கொடுப்பது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications