வீடு, வாகனம், தொழில்னு லைஃப் டைம் செட்டில்மென்ட்.. யோகங்களை அனுபவிக்கும் ராசியினர் யார் தெரியுமா?
Weekly rasi palan: பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கடகம், சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் பெறப் போகும் நற்பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகம்: கடக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். அனுமன் சாலிஷா கேட்பது நல்லது. நரம்பு சார்ந்த பிரச்சனைகள், முதுகு வலி, குறைவான ரத்த அழுத்தம், மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பகை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். உயர் அதிகாரிகள் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அரசு சார்ந்த விஷயங்களில் கோப தாபங்களை தவிர்ப்பது நல்லது.

சமூக வலைதளங்களில் பிரபலங்கள், தலைவரைப் பற்றி எழுதுவது, உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். சூரியன் 8 இல் இருந்து இரண்டாம் இடத்தை பார்ப்பதால் பெரிய சிக்கலையும், பிரச்சனைகளையும் கொடுப்பார். அதே நேரத்தில், எதிர்பார்த்த நல்ல விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். குரு பார்வை தைரியத்தை கொடுக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சுப காரிய தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
தைரியம், நம்பிக்கை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். பண கஷ்டம், மன கஷ்டம் தீரும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும். உத்திரவாதத்துடன் எடுக்கக்கூடிய முடிவுகளால் பலரிடம் பாராட்டை பெறுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எதிரிகள், சட்டத்திற்குப் புறம்பானவர்கள் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் மற்றும் தூக்கத்தில் கவனம் தேவை.
சிம்மம்: அனுகூலமான காலகட்டமாக இருக்கும். வாகன மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து மாற்றங்களும் உண்டாகும். சனியின் தாக்கத்தால் சூரியன் சேர்ந்திருப்பது கனரக தொழிலில் இருப்பவர்கள் மேன்மை அடைவீர்கள். கணவன், மனைவி சண்டைகள் போடாமல் இருப்பது நல்லது.
மேலதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் துணை அல்லது காதலர்கள் உங்களுடைய கோரிக்கைகைளை நிறைவேற்றுவார்கள். பயணங்கள் மேற்கொள்ளும் அற்புத அமைப்பு உள்ளது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். சந்தோஷம், மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படும். தொழில் சார்ந்த விஷயங்களில் பதட்டமில்லாமல் இருப்பீர்கள்.
குடும்பத்தில் உங்களுடைய கஷ்டங்களை ஏற்றுக் கொள்வார்கள். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பாதவலி, பதட்டம் உண்டாகும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளிடம் உள்ள வருத்தத்தை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. உங்களுடைய துணையின் மூலம் நல்ல பலன்களை காண்பீர்கள்.
கன்னி: தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி அளிப்பீர்கள். புதிய முயற்சிகளால் வெற்றியைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பில் உடனிருந்தவர்களே நீங்கள் முன்பு செய்த தவறுக்கு பதில் சொல்லக்கூடிய நிர்ப்பந்தத்தை ஏற்படும். பகையாளிகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். சுமூகமாக செல்வது நல்லது. முதுகு தண்டுவடம், முகத்தில் உள்ள உறுப்புகளால் பிரச்சனைகள் ஏற்படும். பெருமாளை வழிபடுவது நல்லது. பெண்களுக்கு சுப காரியங்கள் நடக்கும்.
கொடுக்கிற வாக்குகளால் வெளிவட்டாரத்தில் நல்ல பெயர் புகழ் ஏற்படும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் புது வரவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தி ஏற்படும். தொழில் ரீதியான அனுகூலங்கள் ஏற்படும். ஆச்சரியப்படும் அளவுக்கு முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில், வியாபாரம், படிப்பில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications