அடுத்த 15 நாட்கள்.. மேஷம், ரிஷபம் ராசிகளில் ஏற்பட போகும் சூப்பர் மாற்றம்
ராசி பலன்: பங்குனி மாதத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இரண்டு வார ராசி பலன்
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். கடந்த மார்ச் முதல் வருகிற மே மாதம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது. தமிழ் புத்தாண்டும் பிறந்துவிட்டது. விரைவில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சியும் நிகழ உள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

16.04.2025 - 30.04.2025
பங்குனி மாதம் நிறைவடைந்து சித்திரை மாதம் பிறந்துள்ளது. புதிய நம்பிக்கையுடன் பிறந்துள்ள விசுவாவசு தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 16.04.2025 - 30.04.2025 மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகவும், தெளிவாகவும் பார்க்கலாம்.
மேஷம்
உள்ளூர், வெளியூர் உள்ளிட்ட அனைத்து விதமான பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொலை தூரத்தில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். அடுத்தடுத்து அதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் பலவீனமாகி, எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
பயணங்கள்
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் மேற்கொள்ளும் பயணம் நல்ல பலன்களை கொடுக்கும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் படிப்படியாக நீங்கும். குடும்பத்தினருடன் நீண்ட காலமாக திட்டமிட்ட ஆன்மிகள் மற்றும் சுற்றுலா சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் மன நிறைவு ஏற்படும்.
பொறுமை
உத்யோகம் மற்றும் தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். அரசு அதிகாரிகள், அரசுடன் தொடர்பில் இருப்போர் தேவையில்லாத அல்லது சர்ச்சைக்குரிய விஷயத்தில் கையெழுத்திடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் அதிகரிக்கும். முடிந்தவரை கோபத்தை தவிர்க்க வேண்டும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தலைவலி, சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வந்து செல்ல வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள அனுமன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது நன்மையை கொடுக்கும்.
ரிஷபம்
உத்யோகம், தொழிலில் ஏற்றம் காணப்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் தேடி வரும். உத்யோகம் மற்றும் தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். முதலீட்டில் நல்ல லாபம் இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் இருந்த மன சங்கடங்கள் நீங்கும். உங்கள் வாழ்க்கை துணையின் நீண்ட நாள் கனவு நிறைவேறும்.
குடும்பம்
பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ள முதியவர்களால் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் நிம்மதி ஏற்படும். நிலம், வீடு, ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அந்நியர் தலையிடு தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும். பிறர் குடும்ப சமாச்சாரங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது அவசியம்.
எச்சரிக்கை
பணம் கையாள்வதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலை தவிர்ப்பது நல்லது. குடும்பத்துக்குள் தேவையில்லாத குழப்பங்கள் வந்து செல்லும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை கழுத்து, வயிறு ஆகியவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் உள்ள மகாலட்சுமி கோயில்களில் சென்று தரிசனம் செய்வது நன்மையை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications