வச்ச குறி தப்பாது.. மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரத்தில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Weekly rasi palan: 2025 பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை மாசி மாதம் 12 ஆம் நாள் முதல் மாசி 18 வரை மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான நற்பலன்கள் கிடைக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வாரத்தில் மிக முக்கிய தினமான மகா சிவாரத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. சிவபெருமானுக்குரிய தினமான மகா சிவராத்திரி தினத்தன்று ஒரு கால பூஜையிலாவது அமர்ந்து மனதார வழிபடுவதால் ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கும். பழங்கள், மலர்கள், வில்வ இலை, தாமரை என தங்களால் முடிந்தவற்றை சிவனுக்கு சாற்றி வழிபடுவது அற்புதமான பலன்களைத் தரும்.

Weekly rasi palan lucky zodiac signs

மகர ராசிக்கு உத்யோகம், தொழில் மற்றும் கல்வியில் ஏற்றம் இருக்கும். சுப காரியங்கள் நடைபெறும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் கல்வி, உத்யோகத்தில் ஆதாயம் உண்டு. வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். ஆச்சரியப்படுமளவுக்கான முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும். வாழ்க்கை துணையால் ஆதாயம் உண்டு.

காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனத்தில் கவனம் தேவை. பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வண்டி ஓட்டும்போது விதிகளை கடைபிடிப்பது வீண் பிரச்னைகளை தவிர்க்கும். அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடுவதால் வாழ்வில் ஏற்றம் உண்டு.

கும்ப ராசிக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முதலீடு அதிகரிக்கும். குழந்தைகளிக் கல்வி, உத்யோகம், தொழிலில் சிறப்பான நல்ல மாற்றம் இருக்கும். நிலம், வீடு, வண்டி, வாகனம் வாங்குவதில் செய்து வரும் முயற்சிகளில் ஏற்றம் உண்டு. வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், நகை உள்ளிட்ட ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மன அழுத்தம் விலகும். உத்யோகத்தில் உயரதிகாரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வீண் விரயம் உண்டாகும். சர்க்கரை, ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ரத்த பந்தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதால் தடைகள் விலகும்.

மீன ராசிக்கு எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். உத்யோகம், தொழிலில் ஏற்றம் இருக்கும். உங்களின் செல்வாக்கு உயரும். வாழ்க்கை துணை ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கிரகங்களின் மாற்றம் அணிவகுப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். குழந்தைகள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். தாய், தந்தை உடல் நலத்தில் கூடுதல் கவனம் வேண்டும்.

கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. முதுகு தண்டுவடம், தோல் ஒவ்வாமை, சுவாச பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. மனதில் ஏற்படும் வீண் பதற்றம், படபடப்பை குறைத்துக் கொண்டு திட்டமிட்டு செயல்பட்டால் எதிலும் வெற்றி நிச்சயம். தட்சிணாமூர்த்தி மற்றும் குரு வழிபாட்டால் நன்மை உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+