கன்னி ராசிக்கு பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. இனி தொட்டதெல்லாம் துலங்கப் போகுது
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூலை 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி வார ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். அலர்ஜி, கால்சியம், பற்களில் வரும் பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவி வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
பிரச்சனைகள் தீரும்
முதலீடுகளுக்கு எந்தவித குறையும் இருக்காது. தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த சிக்கல் படிப்படியாகத் தீரும். நீண்ட நாட்களாக இருந்த மனக் கஷ்டங்கள் தீரும்.
தொழிலில் முன்னேற்றம்
தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் மாற்றங்கள், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான மாற்றங்கள் என அனைத்துவிதமான மாற்றங்களும் ஏற்படும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அரசாங்க உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக பதவி உயர்வு, நிரந்தர வேலை, மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு கிடைக்கும்.
பண வரவு
பண வரவில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். உத்தியோகத்தில் எடுக்கும் திடீர் முடிவுகளால் பெரிய மகிழ்ச்சியையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். தியானம் செய்வது நன்மை பக்கும். பயணங்களின்போது ஆணாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் அதீத கவனமாக இருப்பது நல்லது.
வழிபாடு
தொழில், உத்தியோகம், படிப்பில் அடுத்தடுத்து நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். பெருமாள் வழிபாடு, பெருமாள் மந்திரங்களை ஜெபிப்பது மிகப்பெரிய நன்மைகளையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தி தரும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications