மேஷம், ரிஷப ராசியினருக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. தொட்டது துலங்கும் காலம்
வார ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 28 முதல் மே 4 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மேஷம், ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்
எடுத்த காரியங்களில் அலைச்சல்கள் காணப்பட்டாலும், அதனை பொறுமையாக கையாளுவது நல்லது. எல்லா விஷயங்களிலும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு வரும். பெரிய மனிதர்களின் அனுகூலம் கிடைக்கும். மனதில் நிறைவும், சந்தோஷமும் கிடைக்கும். உங்களுடைய திறமைகள் வெளிப்படக் கூடிய காலகட்டமாக இருக்கும். உள்ளூர், வெளியூர் தொலைதூர பயணங்கள் முன்னோக்கி செல்லக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக்கூடிய காலகட்டமாக இருக்கும். வயிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் சீக்கிரமாக உணவை முடித்துக் கொள்வது நல்லது. விநாயகர் மற்றும் அனுமன் வழிபாடு நல்ல நம்பிக்கையைத் தரும். எத்தனை சவால்கள் வந்தாலும் அதனைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை தரும்.
தொழில் ரீதியான ஆக்கப்பூர்வமான பணிகள் அனுகூலத்தை தரும். பண வரவு நன்றாக இருக்கும். திட்டமிட்டு செய்யக்கூடிய முதலீடுகள் ஆச்சரியமான பலன்களைத் தரும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத்தாங்கல்கள் படிப்படியாகத் தீரும். சந்தோஷமான காலகட்டமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
ஏற்றம், அனுகூலம், தொழில், உத்தியோகம் சகலத்திலும் நம்பிக்கை உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். நீண்ட நாள்களாக இருந்து பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பயணங்கள் வந்தால் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. பயணங்களைத் தவிர்க்காமல் அதில் உள்ள ஆதாயத்தைப் பார்த்து பயன்படுத்திக் கொள்வது நல்லது. குடும்பத்தில் துணை, பிள்ளைகள் சொல்லை செவி கொடுப்பது கேட்பது நன்மையைத் தரும்.
ரிஷபம்
தாய் வழி தந்தை வழி உறவுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. ரத்த பந்த உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். படபடப்பு, ரத்த அழுத்தம் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். துணையுடன் இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். குடும்பத்தாருடன் பயணம் மேற்கொவது இணக்கத்தை ஏற்படுத்தும்.
வேற்று மொழி மனிதர்களால் அதிக அனுகூலம் உண்டாகும். கடல் கடந்து அனுகூலங்கள் மிகப்பெரிய நம்பிக்கை, சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். நீண்ட நாட்களாக இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நவக்கிரகத்தில் இருக்கும் குருவிற்கு தீபமேற்றுவது பலவிதத்தில் நிம்மதியையும் தரும். தடங்கல்கள் தீரும். புதிய முயற்சிகள் அனுகூலத்தை தரும்.
யோக பலத்தை அதிக அளவில் பெறக்கூடியவர்கள் நீங்களாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த அனைத்து தடைகளும் நீங்கும். தொடர்ச்சியாக இருந்த மனத்தாங்கல் படிப்படியாக குறைக்கும். வியாபாரத்தில் காணப்பட்டு வந்த பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தியாகும். புதிய முதலீடுகளை தைரியமாக செய்யலாம். அடிமைத் தொழிலில் இருந்து புதிய தொழில் தொடங்குவதற்கு வைகாசி முடிந்த பின்னர் ஆரம்பிப்பது அருமையான வெற்றியைக் கொடுக்கும்.
-
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது












Click it and Unblock the Notifications