வெச்ச குறி தப்பாது.. மேஷம், ரிஷப ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இதில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: வைகாசி 5 முதல் 11 வரையிலான மே 19 முதல் 25 ஆம் தேதி வரை மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் காது மூக்கு தொண்டை, சளி தொந்தரவுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும். பயணங்கள் சந்தோஷத்தை ஏற்படுத்தி தரும். மனதில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாகத் தீரும். நீண்டநாட்களுக்குப் பிறகு சந்தோஷமும், அனுகூலமும் படிப்படியாக காணப்படுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
மேலதிகாரிகள், பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தெய்வமார்க்கப் பயணங்கள், சந்தோஷப் பயணங்களை மேற்கொள்வது நல்லது. மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று நினைப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் குழப்பங்களைத் தவிர்த்து அமைதிப்படுத்திக் கொள்வது நல்லது. சரிவராது என்று நினைத்துவிட்டால் தீர்க்கமாக முடிவெடுப்பது நல்லது.
உங்களுடைய முயற்சிகள் பலருக்கு உறுதுணையாக இருக்கும். எந்தவொரு விஷயத்தையும் பதட்டத்துடனேயே கொண்டு போய் மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம். எது உங்களுக்கு நடக்க வேண்டுமோ அதனை தெய்வம் நடத்திக் கொடுக்கும். ஏழரை சனி நடப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. தினந்தோறும் பெருமாள், நரசிம்மர், கிருஷ்ணரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் பயணிப்பது நல்லது.
மேஷ ராசி பெண்கள் தைரியமாக இருப்பார்கள். ஆண்கள்தான் பிரச்சனை என்ற யோசனையில் இருப்பார்கள். அந்த யோசனையில் இருந்து படிப்படியாக மாறுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வைகாசி வரைக்கும் நரம்பு, தலைவலி, கண் பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். தேக ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனைகள் இருந்தாலும் குரு பார்வை உங்களை காப்பாற்றும். கண்டிப்பாக சந்தோஷமான நிலை குடும்பத்தில் ஏற்படும்.
ஏற்றங்கள், அனுகூலங்கள் நிச்சயமாக ஏற்படும். நவக்கிரகத்தில் இருக்கும் சூரியன் வழிபாடு மேன்மையை உண்டாக்கித் தரும். தொழிலில் மிக கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வது, தர்க்கம் செய்வது பிரச்சனையை ஏற்படுத்தும். சிறிய வாக்குவாதங்கள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக சரியாகும்.
நியாபக மறதி அதிகமாக காணப்படுவதால் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட அண்டாமல் பார்த்துக் கொள்வது நல்லது. யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடியவர்களாக ரிஷப ராசிக்காரர்கள் இருப்பார்கள். தொழில் ரீதியாக பெரிய நம்பிக்கை, சந்தோஷம் ஏற்படுத்தும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகூடக் கூடிய காலகட்டம்.
உத்தியோகத்தில் கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. நிம்மதியான தூக்கம் மிகவும் முக்கியம். உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் சிக்கல் ஏற்படும். தொழில், அரசு உத்தியோகம், அரசியல்வாதிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது நன்மைகளை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் தவிடு பொடியாகும். மேலதிகாரிகளிடம் இணக்கமாகச் செல்வது நல்லது.












Click it and Unblock the Notifications