தனுசு, மகர ராசிக்கு அடுத்தடுத்து ஹாப்பி.. அதிர்ஷ்டம் கொட்டும்.. இந்த விஷயத்தில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: வைகாசி 5 முதல் 11 வரையிலான மே 19 முதல் 25 ஆம் தேதி வரை தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடியவர்களாக இருப்பீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். எடுத்த காரியங்களில் ஜெயம், அனுகூலம் ஏற்படும். பெருமாள், தாயார் வழிபாடு நல்லது. கோவிந்த நாமத்தை ஜெபிப்பது அற்புதமான பலன்களைத் தரும். கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.
சூரியனின் ஆதிக்கம் இருப்பதால் எல்லாவற்றிலும் வெற்றிகள், அனுகூலம் காணப்படும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்ப விஷயத்தில் உங்கள் தலையீடு பெரிய பாதிப்புகளையும், சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும்.
சகலவிதத்திலும் ஏற்றத்தையும், நம்பிக்கையும் ஏற்படும். குடும்பத்தில் மட்டும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பெரிய பதவி உயர்வு, பெரிய சம்பள உயர்வு, உத்தியோ மாற்றம், தொழில் மாற்றம், அடிமைத் தொழிலில் இருந்து தனித் தொழில் தொடங்கக்கூடிய பிராப்தம் உண்டு. பண வரவில் பிரச்சனைகளே இருக்காது. குடும்பத்தில் துணை, அல்லது துணைவியார் சொல்வதை பிடிக்காவிட்டாலும் அதற்கேட்டவாறு நடப்பது நல்லது. குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பதை நல்லது. சிவன் வழிபாடு சகலவிதத்திலும் நன்மையை ஏற்படுத்தும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, நன்மைகள் அணிவகுத்து வரும். பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. முதுகு தண்டுவடம், கழிவுப் பாதை விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். முகத்தில் உள்ள உறுப்புகளில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது.
வண்டி, வாகனத்தில் வித்தைகள் காட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனை நிவர்த்தி ஏற்படும். நல்ல தூக்கம் நிம்மதியைத் தரும். மன அழுத்தம் படிப்படியாகத் தீருவதை கண்கூடாகப் பார்க்கலாம். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
பூர்வீகத்தில் இருந்த பாதிப்புகள் நிவர்த்தி ஏற்படும். அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆவது பாடலை சொல்ல சொல்ல குடும்பத்தில் புது வரவுகள் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். விநாயகரின் காரிய சித்தி மாலை கேட்க கேட்க அற்புதமான நன்மைகளைத் தரும். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications