தனுசு ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் தங்கமாக மாறப் போகுது.. உங்க காட்டுல இனி பண மழை தான்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: ஆனி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான அதாவது ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Weekly rasi palan Dhanusu Lucky zodiac signs

கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்காரர்கள் குடும்பத்தில் துணையின் விஷயத்தில் இழுபறியான நிலைமை இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வயிறு, கழுத்து, தோள்பட்டை சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. எடுத்த காரியங்களில் வெற்றி, அனுகூலம் உண்டாகும் நல்ல காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறும்.

நிதானம்

எந்தவொரு காரியங்களை செய்தாலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும், ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும் பழக்க வழக்கத்திலோ, பயணங்கள் சமயத்திலோ மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. இளம் வயதைச் சார்ந்த தனுசு ராசிக்காரர்களுக்காக கண்டிப்பாக பழக்க வழக்கங்களால் தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படும். பெற்றோர், பெரியோர் பிள்ளைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

அனுகூலம்

சுப காரியத்தில் குருவின் பார்வை இருப்பதால் அனுகூலம் ஏற்படும். தைரியம் உண்டாகும். ராகு அமைப்பு இருப்பதால் உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணம் மேற்கொள்ளக்கூடிய அமைப்பு ஏற்படும். பண வரவுக்கு உண்டான அனுகூலங்கள் கட்டாயம் ஏற்றத்தை ஏற்படுத்தும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது.

வெற்றி மேல் வெற்றி

தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். தொழில் ரீதியாகவும், உத்தியோக ரீதியாகவும் எடுத்த காரியங்களில் எல்லாம் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் ஆனந்தமும், சந்தோஷமும் ஏற்படும். தனிப்பட்ட முறையில் வாகனம், முதலீடுகளுக்கு குறைவே இருக்காது. வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரும் காலம் கட்டமாக இருக்கும்.

பண வரவு அதிகரிக்கும், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனம் தெளிவடையும். இஷ்ட தெய்வ வழிபாடு அனுகூலத்தை ஏற்படுத்தும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் பனிபோல விலகும். பழக்க வழக்கங்களில் அதீத கவனமாக இருப்பது மேன்மையை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+