மகர ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீங்க.. வம்பு வந்து சேரும்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆடி 5 முதல் 11 ஆம் தேதி வரையிலான (ஜூலை 21 முதல் 27 வரை) மகர ராசிக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமான ஆடி மாதம் பிறந்துள்ளது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகர ராசி பலன்
மகர ராசிக்காரர்களுக்கு மனதில் இருந்து வந்த பாரங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். பிறர் குடும்ப விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. அதேபோல, உங்கள் குடும்பத்திலும் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும். மீறி தலையிடுவது பிரச்சனையை ஏற்படுத்தும். புதன்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்வது ஏற்றத்தையும், அனுகூலத்தையும் கொடுக்கும்.
ஆரோக்கியம்
நரம்பு பிரச்சனைகள், படபடப்பு, ரத்த அழுத்தம் போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். காரிய சித்தி மாலை கேட்பது சொல்வது நல்ல பலன்களைத் தரும். தொழில் ரீதியாக அனைத்து விதத்திலும் ஏற்றமும் ஏற்படும். அதிகளவிலான லாபங்கள் கிடைக்கும்.
சோம்பல்
ஆரோக்கியத்தில் சோம்பல் இருந்துகொண்டே இருக்கும். கடல், ஆறு, மலை, கோயிலுக்குச் செல்லலாம், தனிமையில் இருக்கலாம் என்ற நிலை தோன்றும். அந்த எண்ணங்களில் இருந்து வெளியில் வருவது நல்லது. அதற்குப் பதிலாக தியானம் செய்வது நல்ல பலனைத் தரும். உங்களுக்கான கடமைகளில் கவனம் செலுத்துவது நன்மையை ஏற்படுத்தும். குடும்பத்தில் என்ன விதமான பிரச்சனைகள் வந்தாலும் இணக்கமாக, சமாதானமாக செல்வது நல்லது.
கவனம்
படபடப்பு, நரம்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பாதிப்புக்குள்ளானவர்கள் உரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தூக்கத்தில் பிரச்சனைகள் வரும். இரவு நேரத்தில் தாமதமாக உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. இரவு உணவிற்கும், சாப்பாட்டிற்கும் இடைவெளி விடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.












Click it and Unblock the Notifications