தனுசு, மகர ராசிக்கு அதிர்ஷ்டமும், அபாயமும் சேர்ந்து வருது.. கவனமாக இருக்க வேண்டிய விஷயம் இதுதான்
வார ராசி பலன்: தனுசு மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு சித்திரை 29 முதல் வைகாசி 4 வரை அதாவது மே 12 முதல் 18 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்ப் புத்தாண்டின் சித்திரை மாதம் முடிந்து, வைகாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகங்களின் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த வாரத்தில் தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கிருஷ்ணர் வழிபாடு, குருவாயூர் வழிபாடு அருமையான பலன்களைத் தரும். சளி தொந்தரவில் கவனமாக இருக்க வேண்டும். அனுகூலம் ஏற்றம் உண்டாகும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தால் நடக்கும். மேலதிகாரிகளுக்கு உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.
துணை அல்லது துணைவியாருடன் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தையும், நம்பிக்கையையும் தரும். கணவரைப் பற்றியோ, மனைவியைப் பற்றியோ தவறாகப் பேசினால் அங்கிருந்து நகர்ந்து கொள்வது நல்லது. உங்கள் குடும்பத்தைப் பற்றி மற்றவர்கள் குறை கூறுவதை காது கொடுத்து கேட்காமல் இருப்பது நல்லது. விரைவிலேயே அந்த உறவு கெடும் நிலை ஏற்படும்.
எவ்வளவு தான் அந்நியோன்யமாக இருந்தாலும் அதில் தவறு ஏற்பட்டுவிடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏழாம் இடத்தில் குரு இருப்பதால் குடும்பத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சூரியன் 6 இல் இருப்பதால் ஜெயம் ஏற்படும். புதிய தொழில், உத்தியோகம், வியாபாரம், பணவரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். அரசுத் துறையில் இருப்பவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பிள்ளையார் வழிபாடு, நவக்கிரகத்தில் இருக்கும் கேதுவை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். படபடப்பு, மயக்கம் வருவது, கண்களில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. பிள்ளைகளுடன் பூதக் கண்ணாடி ஆராய்ச்சியைத் தவிர்ப்பது நல்லது.
பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், சுபகாரியம் ரீதியாக அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும், கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய உன்னதமான நிலை ஏற்படும்.
நீங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சொல்லக்கூடிய விஷயங்கள் கை கொடுக்கும். வார்த்தைக்கு மதிப்பும் மரியாதை ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். பண வரவு உண்டாகும். சுப காரியங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications