சிம்மம், கன்னிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் யோகம்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: வைகாசி மாதம் மே 27 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-simmam-kanni-leo-virog-people-will-get-in-may-27-to-jun

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு விநாயகர் வழிபாடு அற்புதத்தை தரும். காரிய சித்தி மாலையை சொல்வது, விநாயகருக்கு அருகம்புல் மாலையை சூடி வழிபடும் நன்மை பயக்கும். நரம்பு, கால், முட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தெய்வ பலத்துடன் பொறுமையாக இருக்கக்கூடிய சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்.

துணையின் அன்புக்குப் பாத்திரமாக விளங்கும் உங்களுக்கு பெரும் வெற்றியையும், சந்தோஷத்தையும் பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். பதட்டத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் காலகட்டம். குடும்பத்தில் கணவனாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவனுக்கு உதவக்கூடிய சூழலும் ஏற்படும்.

பணவரவு அதிகரிக்கும். அனுகூலமான அமைப்பு ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. தொழில் ரீதியாக எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படும். பதவி உயர்வில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கம். கோபப்படுவது, ஆவேசப்படுவது, கற்பனை செய்து நல்ல உறவுகளைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

சனி மற்றும் ஜென்மத்தில் இருக்கக்கூடிய காலகட்டத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெற்றோர், பெரியோர், பிடித்த நண்பர்களின் ஆலோசனைகளை மீறாமல் இருப்பது நன்மையைத் தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தாய் வழி, தந்தை வழி உறவுகளை மிக கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. பார்வதிதேவி வழிபாடு சகல விதத்தில் ஏற்றத்தை தரும். பசு மாடுகளுக்கு வெள்ளிக்கிழமையில் அகத்திக்கீரையை தவிர மற்ற உணவுகளைத் தானமாக அளிப்பது மனதில் இருக்கும் கஷ்டங்கள், பதட்டத்தைக் குறைக்கும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோகம் மாற்றம், படிப்பு மாற்றம் விரும்பக்கூடிய உங்களுக்கு விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

ரத்த பந்த உறவுகளில் ஏற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் பதட்டம் குறையும். முதலீடுகளுக்குப் பிரச்சனை இருக்காது. ஆன்மிக தரிசனம் மனதில் தெளிவையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். தேக ஆரோக்கியத்தில் அலர்ஜி சம்பந்தப்பட்ட விஷயம், தோல் நோய் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

வாகனத்தில் வித்தைகள் காட்டுவதை தவிர்ப்பது நல்லது. எதிரிகளிடம் சமாதான உடன்படிக்கை மேற்கொள்வது நல்லது. அடுத்தடுத்து நல்ல விஷயங்களால் மன மகிழ்ச்சியையும், ஏற்றத்தையும் தரும். படைப்பாளிகள், கலைத் துறையினர், வழக்கறிஞர்கள், மீடியா துறையினர், மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் சுக்கிரனால் ஏற்படுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

புதிய வீடு, நிலம் வாங்குவது, முதலீடு செய்வது, இன்டீரியர் செய்வது, வசதிகளைப் பெருக்கிக் கொள்வது என்று உங்களுக்கேற்ற வசதிகளை செய்து மகிழ்வீர்கள். வாகனங்களில் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிக்கும் உங்களுக்கு அற்புதமான வாரமாக இருக்கும். கணவன், மனைவி அனுசரித்துச் செல்வது குடும்பத்தில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+