சிம்மம், கன்னி ராசிக்கு இனி ஏற்றம் மட்டும்தான்.. தொட்டதெல்லாம் ஹிட்டு.. எச்சரிக்கையும் அவசியம்
வார ராசி பலன்: வைகாசி 5 முதல் 11 வரையிலான மே 19 முதல் 25 ஆம் தேதி வரை சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபங்களைத் தவிர்ப்பது நல்லது. அவர்களுக்கு ஏற்றாற்போல நடந்து கொள்வது நல்லது. துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நல்ல பலன்களைத் தரும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது அனுகூலமான சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலதிகாரிகளிடம் தர்க்கம் இல்லாத சிம்ம ராசிக்காரர்கள் வெற்றி பெறுவார்கள்.
கோபம், யாருடைய பேச்சையும் கேட்காமல் வைராக்கியத்துடன் நடந்து கொண்டால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அஷ்டமத்தில் சனி இருப்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அனைத்து விஷயங்களிலும் இறங்கிச் செல்வது நல்லது. உதவி செய்பவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது. அவர்களுக்கு உங்கள் மீது திடீர் சலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
எதற்காக உங்களைத் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது தீர்க்கத்தை கொடுக்கும். மன அழுத்தத்தை நீக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, பதவி உயர்வில் அனுகூலம், ஏற்றங்கள் காணப்படும்.
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எந்தவொரு விஷயத்துக்கும் அலட்டி கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களும், சந்தோஷமும் ஏற்றத்தையும் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அமைப்பு ஏற்படும். 24 வயதைக் கடந்த சிம்ம ராசிக்காரர்கள் தேக ஆரோக்கியத்திலும், வாகனத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, அடிவயிறு, கழிவுப் பாதை, கால் பாதங்களில் கவனம் தேவை. ஆஞ்சநேயர் வழிபாடு, அனுமன் சாலிஷா கேட்பது அனுகூலத்தை ஏற்படுத்தும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நல்ல பலன்களைத் தரும். தடைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். எல்லா விதத்திலும் ஏற்றம், அனுகூலம் காணப்பட்டாலும் இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றத்தில் மிக மிக கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
சளி தொந்தரவு, ரத்தத்தில் பரவும் தொற்று நோய் தொந்தரவில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. நரசிம்மர் வழிபாடு அனுகூலத்தை தரும். நரசிம்மர் கவசத்தை கேட்க கேட்க மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படும். எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும். தொலைத்தூரத்தில் இருந்து அனுகூலம் காணப்படும்.
வியாபாரத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். செல்வாக்குகள் கூடுவதை கண்கூடாகப் பார்க்கலாம். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறும். உத்தியோகத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க நல்ல காலகட்டம். பழைய கடன்களை தீர்ப்பீர்கள். வேற்றுமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டாகும்.
கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளிநாடு செல்வோருக்கு ஏற்றம் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொற்றுநோய் உபத்திரவம், சளி, சுவாசக் கோளாறில் கவனமாக இருப்பது நல்லது. சுற்றுலா, பயணம், தெய்வீக பயணங்களை மேற்கொள்ளும் காலகட்டமாக இருக்கும்.
-
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?











Click it and Unblock the Notifications