மீண்டும் மீண்டுமா.. சூரியனின் அருளால் சிம்ம ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. கொஞ்சம் கவனமும் தேவை
வார ராசி பலன்: ஆனி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான அதாவது ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். முதலீடுகள் அதிகரிக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றியைப் பெறுவீர்கள். அனுகூலத்தைப் பெறுவீர்கள். நரசிம்மர் கவசம் கேட்பது, நரசிம்மரை வழிபடுவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். அவர்களுடைய நம்பிக்கை உரிய நபர்களாக மாறும் நேரமாக இருக்கும்.
தடைகள் நீங்கும்
ராசிநாதன் 11 இல் பெறுவதால் குடும்பத்திலும், சமுதாயத்திலும் பெரிய செல்வாக்குகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உத்தியோகத்தில் மாற்றங்கள், ஏற்றங்கள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படாமல் இருப்பது நல்லது. தோக ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
ஆரோக்கியம்
மயக்கம், தலைசுற்றல், காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள், ஹார்மோன் குறைபாடுகள் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவனிடம் அன்போடு பேசுவது நடந்துகொள்வது முக்கியமானதாகும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். வாகனம் தொடர்பான விஷயங்களில் அனுகூலங்கள் காணப்படும்.
முதலீடுகளால் அனுகூலம்
வாழ்க்கையில் நம்பிக்கையும், முன்னேற்றமும் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறும். தொழில் ரீதியாக, உத்தியோகம் ரீதியாக நம்பிக்கையும், அனுகூலமும் ஏற்படும். யோகமும், சந்தோஷமும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். முதலீடுகள் விஷயங்களில் குறைவில்லாமல் இருக்கும். அபரிமிதமான லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்டம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான காலகட்டமாக இருக்கும். இருப்பதை வைத்துக் கொள்வது நல்லது. அதைவிட்டு விட்டு வேறு விஷயங்களுக்கு ஆசைப்படாமல் இருப்பது நல்லது. கிரகங்கள் அற்புதமான நிலையில் உள்ளது. மனதை கட்டுப்படுத்தவில்லை எனில் அஷ்டமத்தில் இருக்கும் சனி பிரச்சனைகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. வாகனங்களை இயக்கும்போது பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.












Click it and Unblock the Notifications