ரிஷபத்துக்கு குருவின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம், பணம்.. ஆனா வாயிலதான் கண்டமே.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: ஆனி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான அதாவது ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு முருகர் வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், அனைத்து விஷயங்களிலும் அனுகூலத்தையும் உங்களுக்கு ஏற்படுத்தும். பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். அனுகூலம், மகிழ்ச்சி, திடீர் அதிர்ஷ்டமும், ஏற்றமும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். காது, மூக்கு, தொண்டை, சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
குருவால் அதிர்ஷ்டம்
குரு பார்வை தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். இந்த ஒரு வருடத்திற்குள் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் உங்களை நிலை நிறுத்திக் கொள்ள அற்புதமான காலகட்டமாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். குருவின் பார்வை அஷ்டமத்தில் இருப்பதால் மன அழுத்தம் பரிபூரணமாக நீங்கும். மரண பயமும் படிப்படியாக நீங்கும்.
வெற்றி மேல் வெற்றி
எடுத்த காரியங்களில் அனைத்திலும் வெற்றி உண்டாகும். சகல காரியங்களிலும் முன்னேற்றமும், நம்பிக்கையும் ஏற்படும் அருமையான காலகட்டமாக இருக்கும். வாழ்க்கையில் வளம் பெறக்கூடிய யோகம் உண்டாகும். வார்த்தைகளில் மிக கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் வார்த்தைகளை பார்த்துப் பேசுவது நல்லது. சிறிதாக உணர்ச்சிவசப்பட்டாலும் பெரிய பாதிப்பையும், சங்கடத்தையும் ஏற்றபடுத்தும் காலகட்டமாக இருக்கும்
தொழில்
தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள், சவால்கள் அனைத்தும் பரிபூரணமாகும் நிவர்த்தியாகும். மற்றவர்களிடம் தர்க்கம் செய்வது, வாக்குவாதத்தை செய்வதை தவிர்ப்பது நல்லது. பேச்சில் இனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வாக்கு ஸ்தானத்தில் சூரியனும், குருவும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தேவையில்லாத குழப்பமான விஷயங்களையும், சங்கடப்படும் வார்த்தைகளையும் பேச வைக்கும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நிதானம்
குடும்பத்திலும், சமுதாயத்திலும் எல்லோரிடமும் மிகுந்த நிதானத்துடனும், பொறுமையாகவும் செல்வது நல்லது. மற்றபடி அனைத்து விஷயங்ளும் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். முன்னேற்றம், வளர்ச்சி ஏற்படும் காலகட்டமாக இருக்கும். தொழில் சார்ந்த பயணங்களை சிறிது நாட்களுக்குத் தள்ளிவைப்பது நல்லது.












Click it and Unblock the Notifications