குறி வச்சா இரை விழணும்.. மேஷம், ரிஷப ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டம்.. இதில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: வைகாசி மாதம் மே 27 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் காது, மூக்கு, தொண்டை, சைனஸ் போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதனால் குடும்பத்தில் ஆனந்தமும், சந்தோஷமும் ஏற்படும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளில் நிவர்த்தி ஏற்படுத்தக்கூடிய நல்ல காலகட்டம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடப்பதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
உத்தியோகம் நிமித்தமாக நீண்ட நாட்களாக இருந்த தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். பண வரவு அனுகூலத்தை ஏற்படுத்தித் தரும். முதலீடுகளுக்கு எந்தவொரு குறைவும் இருக்காது. பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆத்ம ரீதியான நம்பிக்கையும், சந்தோஷமும் ஏற்படுவதை கண் கூடாகப் பார்க்கலாம். தொழில் அபிவிருத்தி, வியாபார அபிவிருத்தி, உத்தியோக அபிவிருத்தி என்ற எந்தவொரு அபிவிருத்திகளுக்கும் குறைவிருக்காது.
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். எல்லா விஷயங்களிலும் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்வீர்கள். இதுவே உங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை ஏற்படுத்தி தரும். அற்புதமான அமைப்பை பெறுவதற்கு பெருமாள் வழிபாடும், கோவிந்த நாம வழிபாடும் சகல விதத்தில் ஜெயத்தையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்தி தரும்.
வார்த்தைகளில் மட்டும் மிகுந்த கவனமாகப் பார்த்து பேசுவது நல்லது. எல்லோரும் உங்களை கோபப்படுத்துவதை போலத்தான் நடந்து கொள்வார்கள். எல்லா உதவிகளையும் உங்களிடத்தில் வாங்கிவிட்டு உங்களையே குறை சொல்வார்கள். ஆனால் தெய்வ பலமும், பூர்வ புண்ணியத்தின் அனுகூலமும், கேது பூர்வ புண்ணியத்தில் இருப்பதால் விநாயகர் மந்திரத்தை ஜெபிக்க ஜெபிக்க உங்களைப் பற்றி யார் பேசினாலும் அந்த பாதிப்புகள் அவர்களுக்கே சென்றுவிடும். எந்த விதமான செயலையும் அவர்களுக்கு எதிரே செய்யாமல் இருப்பது நல்லது. திட்டமிட்டு செய்யக்கூடிய விஷயங்கள் ஜெயத்தை ஏற்படுத்தும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆஞ்சநேயர் வழிபாடு அற்புதத்தை தரும். சூரியனின் ஆதிக்கம் உங்கள் ராசியில் இருப்பதால் அனுமன் சாலிஷா படிப்பது நல்லது. நரம்பு, முதுகுத் தண்டுவடம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் விஷயத்திலும், உடன் வேலை செய்பவர்களின் விஷயத்திலும், வியாபாரத்திலும், இன்கம் டாக்ஸ், ஏற்றுமதி, இறக்குமதி போன்ற துறைகளில் இருப்பவர்கள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் பெரிய சிக்கல்கள் ஏற்படும்.
இழுபறியாக இருந்த பிரச்சனைகள் படிப்படியாகத் தீர்வதை கண்கூடாகப் பார்க்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும். தெய்வ பலத்துடன் மந்திர ஜாபத்தைக் கேட்பதும், கோதுமை தொடர்பான பொருள்களை பசுமாடுகளுக்கு தானமாக அளிப்பதும் அற்புத பலன்களைத் தரும்.
வைகாசி மாதம் முடியும் வரை எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் சார்ந்த விஷயத்தில் குரு பார்வை இருப்பதால் தொழில் அமைப்பு, உத்தியோக அமைப்பு, வியாபார அமைப்பு, படிப்பு அமைப்பில் இருந்த தடைகள் நிச்சயமாக நிவர்த்தி ஏற்படும். குடும்பத்தில் துணை அல்லது துணைவியாரின் நீண்ட நாள் மனக் கவலைகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு, உங்கள் குடும்ப விஷயத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்












Click it and Unblock the Notifications