ராஜா பகவத் போல மாறும் மகர ராசி.. தொட்டதெல்லாம் பணம் தங்கமாக மாறும் காலம்.. ஒரு விஷயத்தில் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

மாத பலன்: ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஜூலை மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகப் பெயர்ச்சிகளானது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் குருவும், சூரியனும் இணைந்திருக்கின்றனர். கடகத்தில் புதனும், சிம்மத்தில் கேதுவும், செவ்வாயும் உள்ளனர்.

what-kind-of-benefits-fortunes-will-get-magaram-capricorn-rasi-people-during-this-july-month

கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும், மாதத் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சந்திர பகவானும் உள்ளனர். இந்த மாதத்தின் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்குச் செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கும், 29 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்குள் வருகிறார்.

அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், தெய்வ வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மகர ராசி பலன்

மகர ராசிக்காரர்களுக்கு ராசிநாதனாக இருக்கக்கூடிய சனி பகவான் 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஏழரை சனி முடிந்தும் பெரிய வளர்ச்சி எதையும் காணாமல் இருந்திருப்பீர்கள். ஜூலை 13 ஆம் தேதியில் இருந்து வளர்ச்சியைப் பெறும் காலகட்டமாக இருக்கும். சனி பகவான் வக்கிரம் அடைவதால் மந்தமாக இருந்த விஷயங்கள் அனைத்தும் வேகம் பெற ஆரம்பிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை ஏற்படும். எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.

வெற்றி

உங்களுடைய ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் காலகட்டமாக இருக்க வேண்டும். 2 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் பெரிய விஷயங்களை சாதிக்க வேண்டும். பெரிய விஷயங்களை நினைக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம் தோன்றும். உங்களுடைய உழைப்புக்கேற்ற ஊதியம், அங்கீகாரம் கிடைக்கும். இதுவரை தடைபட்ட அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள்.

தொட்டது துலங்கும்

சூரியன் 7 ஆம் இடத்தில் வந்து அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் சூரியனைப் போல செயல்படும் தன்மை உண்டாகும். ஜூலை 13 ஆம் தேதிக்குப் பிறகு தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். 10 ஆம் அதிபதியாக இருக்கும் சுக்கிர பகவான் ஆட்சி பலத்தோடு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் வேலை, வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அனைத்து விதமான சுக போகங்களும் கிடைக்கும்.

மாற்றங்கள் வரும்

அனைத்து விதமான சுபகாரியங்கள், வண்டி, வாகனம், பாக்கியங்கள் கொடுக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் மாற்றம் செய்வது, கூடுதல் தொழில் செய்வது, வேலை மாற்றம், உத்தியோக மாற்றம், இடமாற்றம் என அனைத்தும் கிடைக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

தொழில்

அழகு சம்பந்தப்பட்ட, கலைத் துறை, ஜவுளித் துறைகள் சிறப்பு பெறக்கூடிய மாதமாக இருக்கும். 2 ஆம் அதிபதி தனக்கு 2 ஆம் இடமான தன ஸ்தானத்தில் இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். பிரம்மாண்டத்துக்கு காரணகர்த்தாவான ராகு பகவான் 2 ஆம் இடத்தில் இருப்பதால் பிரம்மாண்ட பணவரவு, வெளிநாட்டில் இருந்து பண வரவு, தொழில் மூலம் பண வரவு உண்டாகும்.

பண வரவு கொட்டும்

பெரும் பணத்தை தரும் குருவும் 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கும். நல்ல திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதன் 7 ஆம் இடத்தில் அமர்ந்து கொண்டு சமசப்தம பார்வையாக லக்கினத்தைப் பார்க்கிறார். அறிவாற்றலால் உங்களுடைய திட்டங்களை செயல்படுத்தி தனத்தைப் பெருக்கும், குவிக்கும் யோகம் உண்டாகும்.

பாக்கியம்

8க்கு உரியவர் 6 இல் இருப்பதால் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. எலும்பு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், தலை, தலைவலி, காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 6 ம் இடத்தில் ஒரு கிரகம் இருந்தால் அதனால் தொந்தரவு வர வாய்ப்புள்ளது. ஆனால், பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கடவுளின் அனுகூலம் பரிபூரணமாகக் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு, வெளித்தொடர்பு, வெளிநாட்டில் செட்டிலாகும் யோகம் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+