மீனத்துக்கு ஜென்ம சனியிலும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. நல்ல நேரம் ஆரம்பமாகுது.. மிஸ் பண்ணிடாதீங்க
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான் தற்போது மீன மனையில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். வரும் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்ததால் இனிமேல் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.

ஜூலை 13 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான 83 நாட்கள் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அதேபோல, அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கிறார். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியா் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீன ராசி பலன்
மீன ராசிக்காரர்களுக்கு லாபம், விரையத்தைக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். உங்கள் ராசி லக்கினத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். ஏழரை சனியில் ஜென்ம சனியாக சனி இருக்கிறது. மனதை செயல்படுத்த விடாமல் குழப்ப நிலையில் வைத்திருக்கும். ஏதாவதொரு விஷயத்தை நினைத்துக் கொண்டே இருக்கும் நிலை இருக்கும். தற்போது சனி வக்கிரமடைவதால் கஷ்டங்களை, பாதிப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கும் சனி இயல்புக்கு மீறி இனி நன்மைகளைக் கொடுக்கும்.
ஆரோக்கியம்
உங்களுடைய தனித் திறமையுடன் செயல்படும் காலகட்டமாக இருக்கும். முடிவெடுப்பதில் குழப்பமான நிலையில் இருந்தவர்கள் இனி சுறுசுறுப்புடன் தெளிவாக முடிவெடுத்து வேகமாக செயல்படுத்துவீர்கள். அந்த விஷயங்களில் வெற்றியையும் காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் இனி தீர்வு கிடைக்கும். நல்ல மருத்துவர், மருத்துவம், ஆலோசனை கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். இனி வீறுகொண்டு செயல்படும் காலகட்டமாக இருக்கும்.
முயற்சிகளில் வெற்றி
சனி பகவான் 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல், தடைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனிமேல் அந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நினைத்த காரியங்கள் ஜெயமாகும். பயணங்களால் ஆதாயம், அனுகூலம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
குடும்பம்
கணவன், மனைவிக்கிடையே பிரச்சனை, பிரிதல், புரிதல் இல்லாமை போன்ற தன்மைகள் இனி மாறும். கணவன், மனைவிக்கிடையே புரிதல், தன் மனைவி பிள்ளை என்ற எண்ணம் தோன்றும். போட்டி, பொறாமை, பிடிவாதத்தில் இருந்து விடுதலை பெறும் காலகட்டமாக அமையும். கூட்டாளிகள், கூட்டுத் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவி சார்ந்த விஷயங்கள், உறவு சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் காலகட்டமாக இருக்கும்.
குழந்தை பாக்கியம்
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்துக்காக காத்திருப்பவர்களுக்கு இனி குழந்தை பாக்கியம் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும்போது குழந்தை பாக்கியம் கட்டாயமாக கிடைக்கும். அதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒன்றிணைதல் ஏற்படும். தொழிலில் விரக்தி, திருப்தி இல்லாத தன்மை இருந்திருக்கும்.
இனி அந்த நிலைமை மாறி, அற்புதமான காலகட்டமாக இருக்கும். தொழிலில் பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டமாகவும், தொழில் நன்றாக சென்று கொண்டிருப்பவர்களுக்கு சிறு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் திருப்தியின்மை இருந்து கொண்டே இருக்கும். வளைவு, நெளிவு, சுளிவோடு செல்வது நல்லது.
வெளிநாடு யோகம்
வெளிநாடு சென்றும் நிம்மதி இல்லாமல் இருப்பவர்களுக்கு இனி அந்த நிலைமை மாறும். வெளிநாடு வேலைவாய்ப்பு, செட்டிலாவது, தொழில் செய்வது போன்ற வெளிநாடு சார்ந்த அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். அழுத்தம், சுமையோடு இருக்கும் உங்களுக்கு இனி அதிர்ஷ்டமான காலகட்டமாக கட்டாயமாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications