Rasi palan: கும்பம், மீனம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இந்த விஷயத்தில் மட்டும் கவனம்
நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான மாதத்தின் முதல் பாதி கும்பம் மற்றும் மீனம் ராசியினருக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றமானது 12 ராாசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கும்பம், மீனம் ராசியினருக்கு நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கிடைக்கும் பலன் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுபவிரய பிராப்தம் அதிகமாக ஏற்படும் சூழல் ஏற்படும். மன அழுத்தம் தீரும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கழிவுப் பாதை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் அதீத கவனமாக இருக்க வேண்டும். உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். சர்க்கரை, ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் ஒருமுறை உடற் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
லாபம் உண்டாகும்
குழப்பங்கள் அதிகமாக இருக்கும். நாராயணியத்தில் இருக்கும் 100 ஆவது பாடலை படிப்பது நன்மை பயக்கும். குருவாயூர் கிருஷ்ணரை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். அருகில் உள்ள கிருஷ்ணர் கோயில்களுக்குச் சென்று வருவது ஏற்றத்தை தரும். பெரிய அளவுக்கு ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். ஒருவிதமான பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். தியானம் செய்வது நன்மையைத் தரும்.ஆரோக்கியத்தில், மனம் ரீதியான விஷயங்களில் கவனமாக இருந்தால் மற்ற எல்லா விஷயங்களிலும் நன்மைகள் ஏற்படும். எல்லா விதத்திலும் ஏற்றம், லாபம் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. அவர்களுடன் தர்க்கம் செய்வது, சாபம் விடுவதைத் தவிர்ப்பது நல்லது. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். முதலீடுகள் அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
அனுகூலம்
செல்வாக்கு அதிகரிக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு அனுகூலத்தை தரும். குலதெய்வ வழிபாடு செய்வது நன்மை பயக்கும். விநாயகர், பைரவர் வழிபாடு ஏற்றத்தை தரும். சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். குருவின் பார்வை இருப்பதால் மகான்களை வழிபாடு செய்வது சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் ரீதியாக மாற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
பிரச்சனை நீங்கும்
வியாபாரத்தில் இருந்த கூட்டாளி பிரச்சனைகள் நீங்கும். ஜென்மசனியில் இருப்பதால் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். மற்ற எல்லா விஷயங்களும் ஏற்றத்தை தரும். அனைத்து விதமான சுப காரியங்களும் உங்களுக்கு நடக்கும். தள்ளிப் போடாமல் இருப்பது நல்லது. ரிஸ்குகளை தைரியமாக எடுக்கலாம். அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications