நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரை மேஷம், ரிஷப ராசியினருக்கு எப்படி இருக்கும்.. முழு விவரம்
நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான மாதத்தின் முதல் பாதி மேஷம் மற்றும் ரிஷப ராசியினருக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.
மேஷம்
பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வயிறு தொடர்பாக சிறு பிரச்சனைகள் வந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அனுகூலத்தை தரும். சிலர் தெய்வம் ரீதியான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் துணையிடம் சண்டைகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளியிடத்தில் உங்களுக்கு அனைத்து விஷயங்களும் சாதகமாக நடக்கும்.

முதலீடுகளுக்கு குறைவிருக்காது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு இருந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் தீரும். புதிய புதிய பொறுப்புகள் கிடைக்கும். அடுத்தடுத்த முன்னேற்றங்கள் ஏற்படும். நிலம், வீடு சம்பந்தப்பட்ட, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றிகள் ஏற்படும்.
எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். வாகனங்களை மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் கண்டிப்பாக புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். முருகரின் சுப்ரமணிய புஜங்கத்தை படிப்பது கேட்பது, முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்ல மேன்மையைத் தரும்.
ரிஷபம்
அரசுத் துறை, தனிப்பட்ட துறையில் இருக்கும் ரிஷப ராசியினருக்கு மேலதிகாரிகளுக்கும், உங்களுக்கும் இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். சிவாலயங்களில் 100 கிராம் நல்லெண்ணெய், வில்வப் பூவை கொடுப்பது வெற்றியைக் கொடுக்கும்.
பண வரவில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கடந்த வாரம் வரை பணமே இல்லை என்றவர்களுக்கு கூட தங்கம், வெள்ளியை முதலீடு செய்யும் அளவுக்கு பண வரவு ஏற்படும். உங்களுடைய ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் இவை அனைத்தும் இரட்டிப்பாகும் வாய்ப்பு ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, பெற்றோர்களின் தேக ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முதுகுத் தண்டுவடம், கழுத்துப் பகுதிக்கும் முறையான உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும். மேலதிகாரிகளின் முழு வேலையையும் நீங்கள் எடுத்து செய்வீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். தடைகளைத் தகர்த்தெறியும் நல்ல காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications