சிம்மம், கன்னி ராசியினருக்கு 15 நாட்களில் வரப்போகும் அற்புத மாற்றம்.. முழு பலன்கள் இதோ

Subscribe to Oneindia Tamil

நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான மாதத்தின் முதல் பாதி சிம்மம் மற்றும் கன்னி ராசியினருக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றமானது 12 ராாசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சிம்மம், கன்னி ராசியினருக்கு நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கிடைக்கும் பலன் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

what-kind-of-benefits-simmam-and-kanni-rasi-people-will-get-during-this-november-month

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தாய் வழி, தந்தை வழி உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். துணைக்கும், உங்களுக்கும் இருந்த மன வருத்தங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பழைய கடன்கள் அனைத்தும் தீரும் யோகம் உண்டாகும். சண்டை, சச்சரவுகள் நீங்கி அன்பு செலுத்தும் காலகட்டம் உண்டாகும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ், நரம்பு தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

அந்நியர் தலையீடு

தெய்வீக வழிபாடுகள், தெய்வ மார்க்க பயணங்களைச் செய்து மகிழ்வீர்கள். உறவு முறையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் பிறர் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. காதல் அமைப்பில் நண்பர்கள் தலையிடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றங்கள் வந்தால் அதனை எடுத்துக் கொள்வது நல்லது.

வாக்குவாதம்

பெற்றோர், பெரியோர் விஷயங்களில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புள்ளது. 4 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் உறவுகளால் தொந்தரவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வண்டி, வாகனங்களை மாற்றி புதியதாக வாங்குவீர்கள்.

வழிபாடு

வேலைக்காரர்களால் இருந்து வந்த பாதிப்புகள் படிப்படியாக நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். விஷ்ணு வழிபாடு, விஷ்ணு காயத்ரி மந்திரத்தை சொல்லி வருவது நன்மையையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். மறுமணத்திற்கான சரியான நேரம் வரும். எல்லா விஷயத்திலும் ஏற்றம் பெறுவீர்கள்.

பிரச்சனைகள் நீங்கும்

குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். இளம் வயதினர், திருமணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி நன்மைகள் ஏற்படும். பெருமாள் வழிபாடு அற்புதமான அனுகூலத்தை தரும். தினந்தோறும் சுப்பிரபாதம் கேட்பது ஜெயத்தை ஏற்படுத்தும். தினந்தோறும் சுப்பிரபாதம் கேட்பது வெற்றியைக் கொடுக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய அமைப்பு ஏற்படும்.

சொத்து வாங்கும் யோகம்

பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். வேற்று மொழி நாட்டில் அதிக செல்வாக்கு ஏற்படும். தொழில், வியாபாரம், படிப்பு, உத்தியோகத்தில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். காதல் அமைப்பு பெற்றோர், உறவினர், நண்பர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். நிலம், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கைகொடுக்கக் கூடிய அற்புதமான காலகட்டம். அலர்ஜி தொடர்பான விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+