துலாம், விருச்சிக ராசியினருக்கு பண மழை கொட்டப் போகுது.. நவம்பர் 15க்குள் வரும் குட்நியூஸ்
நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான மாதத்தின் முதல் பாதி துலாம் மற்றும் விருச்சிகம் ராசியினருக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றமானது 12 ராாசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், துலாம், விருச்சிகம் ராசியினருக்கு நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கிடைக்கும் பலன் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக் கூடிய நல்ல காலகட்டம். அபிராமி அந்தாதியைப் படிப்பது குறைகளை நிவர்த்தி செய்யும். பார்வதி தேவி வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அனுகூலம்
பல், காது, மூக்கு, தொண்டை, சளி, தலைவலி, அலர்ஜி போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆயில் புல்லிங் செய்வது நன்மை பயக்கும். சனி உச்சம் பெறக்கூடிய ராசி. தடைகள் எல்லாம் நிவர்த்தியாகும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். எதிரிகள் விஷயங்களில் வெற்றிகள் உண்டாகும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சுப விரயங்கள் காணப்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது.
கோபம் வேண்டாம்
உறவு முறைகளில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், சுபகாரியங்கள், பிள்ளைகள் விஷயங்கள், பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். விநாயகர் வழிபாடு, துர்க்கை, முருகன் வழிபாடு வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். காரியசித்தி மாலை, சுப்பிரமணிய புஜங்கம் சொல்லிக் கொண்டிருப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும்.
கவனம்
வெளியிடத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். அனைத்து விதமான வெற்றிகளும், லாபங்களும் ஏற்படும். வாகனங்கள், பகைவர்கள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். உணவே நஞ்சாகக்கூடிய வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications