Sevvai peyarchi: தனுசு ராசியை சோதிக்கப் போகும் செவ்வாய்.. சாதகமா?.. பாதகமா?
செவ்வாய் பெயர்ச்சி: மிதுன ராசியில் இருக்கும் செவ்வாய் ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை 1:56 மணிக்கு, கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆவார். இதனால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், செவ்வாய் பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும். சாதகமா, பாதகமா என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசிகளை, இயக்கத்தை மாற்றுகின்றன. கிரகங்களின் இயக்க மாற்றம் மற்றும் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் தளபதி ஆகும். பூமியின் மகனான செவ்வாய் அக்னியுடன் தொடர்புடையவர்.

படை, வீரம், தைரியம், செல்வம், நிலம், வீடு போன்றவற்றுக்கு காரணியானவர் செவ்வாய் கிரகம். இந்த கிரகம் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவது வழக்கம். ஜோதிடத்தில் செவ்வாய் பெயர்ச்சி என்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. செவ்வாய் மிதுன ராசியில் தற்போது இருக்கிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 1:56 மணிக்கு கடக ராசிக்குள் பெயர்ச்சியாகிறார்.
செவ்வாய் பெயர்ச்சியாவதால் சில ராசிக்காரர்கள் சுப பலன்களையும், சில ராசியினர் அசுப பலன்களையும் பெறுவர். அந்த வகையில், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி என்னவிதமான பலன்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு 7 ஆம் வீட்டில் செவ்வாய் வருகிறார். இதனால், திருமணத் தடைகள் உண்டாகும். காதலிப்பவர்களுக்கு திருமணத்தில் முடியாமல் பாதியிலேயே நிற்கும். 7 ஆம் வீட்டில் செவ்வாய் வக்கிரம் பெறுவதால் இல்லற வாழ்வில் இன்பம் கொடுக்கும். புத்தி தடுமாறுவதற்கான வாய்ப்புள்ளது. தேவையில்லாத தொடர்புகள் உருவாக்கும். தம்பதிகளுக்குள் தேவையில்லாத சந்தேகங்கள் உண்டாகும். அவமானங்கள் ஏற்படும்.
7 என்பது விவகாரத்துக்கான இடம். கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சண்டைகளை பெரிய விஷயமாக்காமல் இருப்பது நல்லது. குறுக்கு வழியில் வெளிநாடு செல்ல முயற்சிப்பது, வெளிநாடு செல்ல பணம் கட்டுவது போன்றவற்றை தள்ளிவைப்பது நல்லது. இல்லையெனில் ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்படும்.
ஏழாம் வீட்டு செவ்வாய் பகவான் திருமண பிராப்தம் தடைபடும். தப்பு செய்கிறோம் என்பது தெரியாத அளவுக்கு தப்பு செய்யும் நிலை ஏற்படும். சம்பந்தமில்லாத விஷயங்களில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். குடும்பம், வேலை, பெண்கள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications