Jana Nayagan படம் எப்போது வெளியாகும்.. வெற்றி பெறுமா விஜயின் கடைசி படம்.. பிரபல ஜோதிடர்கள் கணிப்பு
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தவெக மூலம் அரசியல் பிரவேசம் செய்த நடிகர் விஜய் நடித்துள்ள அவரின் கடைசி படமான ஜனநாயகன் படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக திட்டமிட்டபடி ஜனநாயகன் வெளியாகவில்லை. அந்தப் படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடையும் விதித்துள்ளது. இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு வருகிற திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் காங்கிரஸ் நிர்வாகிகள் வரை ஜனநாயகன் படத்தில் பாஜக அரசியல் செய்வதாக விமர்சனம் செய்து வருகிறார்கள். படம் வெளியாகாததால் அவரின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். இந்நிலையில் ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும், அது வெற்றியடையுமா என்பதை பிரபல ஜோதிடர்கள் கணிப்பு குறித்த கட்டுரையாக காணலாம்.

ஜனநாயகன் படம் கணிப்பு
விஜய்க்கு சுக்கிர திசை, ராகு புத்தி நடைபெற்று கொண்டிருக்கிறது. இது சிறப்பான அமைப்பு. சுக்கிரனுக்கு ராகு ஐந்தாம் இடத்தில் இருந்து அதிர்ஷ்டத்தை தருகிறார். இது பெயர், புகழ்களை கொடுக்கும். சந்திரன் அவருக்கு லக்னாதிபதியாவார். நவம்பர் 17 ஆம் தேதி முதல் சந்திரன் பார்வையால் அரசு தடைகள் ஏற்பட்டு விலகும்.
சுக்கிரன், சந்திரன், ராகு இணைவு நல்ல யோக காலம். இருப்பினும் அரசியல் ரீதியான விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். ஜனவரி 9, 10 நாட்கள் அவருக்கு சாதகமாக இல்லை. அப்போது விமர்சனங்கள், பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். 11 ஆம் தேதியில் இருந்து சனி திசை மாறி, புதன் திசை வருகிறது. அதன் பிறகு தடைகள் விலகி யோகம் அதிகரிக்கும். அனைவரும் போற்றுமளவுக்கு வெற்றியடைவதற்கு வாய்ப்புள்ளது.
கரைசேருமா கடைசி படம்
மார்ச் 12 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருப்பார். அவர் அங்கிருந்து லாப பலன்களை கொடுக்கிறார். குரு பார்வை 11 ஆம் இடத்தில் இருப்பதால் அது வழக்கத்தை விட அதிக வெற்றியை கொடுக்கவே வாய்ப்புள்ளது. அவரின் அந்தஸ்து, கௌரவம் அதிகரிக்கும். அவரின் தசா புத்தி அடிப்படையில் மக்கள் அந்தப் படத்தை அதிகளவு கொண்டாடுவார்கள்.
விஜய் கடகம் ராசி. தமிழ்நாடும் கடகம் ராசி. அரசியல், சினிமாவில் கோலோச்சிய பலர் கடக ராசிதான். 9 ஆம் தேதியை விட மற்ற தேதி அதற்கு மற்ற தேதி மிகவும் உகந்தது. அவரின் அரசியல் எதிரிகள், திரைத்துறை போட்டியாளர்களால் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இறுதியில் படம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது.
-
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications