தமிழகத்தின் போக்குவரத்து முகத்தையே.. மாற்றப்போகும் பிரம்மாண்ட சாலை.. எங்கே வருது? நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் பயண நேரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல்வேறு மெகா சாலைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது பல முக்கிய எக்ஸ்பிரஸ் சாலைகள் மற்றும் ரிங் ரோடு திட்டங்கள் இறுதி நிலையை எட்டியுள்ளன. இத்திட்டங்கள் நிறைவடையும் போது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் - சென்னை விரைவுச் சாலை (NE-7)

தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களை இணைக்கும் இந்த 258 கி.மீ நீள விரைவுச் சாலை, தற்போதைய நிலவரப்படி 90 சதவீதப் பணிகளை நிறைவு செய்துள்ளது. சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்தச் சாலை, தற்போதைய பயண நேரத்தை பாதியாகக் குறைக்கும். குறிப்பாக, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள மூன்று முக்கிய தொகுப்புகளில் (Packages) பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

5 Major Highway Road Projects Redefining Tamil Nadu s Logistics in 2026

இருப்பினும், அரக்கோணம் மற்றும் காஞ்சிபுரம் இடையே உள்ள சுமார் 25 கி.மீ தொலைவிலான ஒரு பகுதியில் சிறு தொய்வு ஏற்பட்டது. ஒப்பந்ததாரர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அந்த இடத்திலும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வரும் ஜூலை 2026-க்குள் ஒட்டுமொத்த சாலையையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாலை பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான சரக்கு போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பலமடங்கு வேகமெடுக்கும்.

சென்னை வெளிவட்டச் சாலை (CPRR)

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட 133 கி.மீ நீளமுள்ள இந்த 'சென்னை பெரிபரல் ரிங் ரோடு' திட்டம், சென்னையின் நான்காவது வளையச் சாலையாக அமைகிறது. இது எண்ணூர் துறைமுகத்தையும் மகாபலிபுரத்தையும் இணைக்கிறது. தற்போது இத்திட்டத்தின் ஒட்டுமொத்தப் பணிகளில் சுமார் 79 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில் முதல் மாமல்லபுரம் வரையிலான 5-வது தொகுப்புப் பகுதியில் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இச்சாலை பயன்பாட்டிற்கு வரும்போது, வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழையாமல் நேரடியாகத் துறைமுகத்தை அடைய முடியும். இது நகரின் உட்புறச் சாலைகளில் நெரிசலைப் பெருமளவு குறைக்கும். 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பெரும்பாலான பகுதிகள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலை (NH-744)

தென் தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் மிக முக்கியப் பாதையான மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலைத் திட்டம் தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரையிலான இரண்டு தொகுப்புப் பணிகள் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை நெருங்கிவிட்டன.

ராஜபாளையம் பகுதியில் 99.7 சதவீதப் பணிகளும், திருமங்கலம் பகுதியில் 94 சதவீதப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்துச் சோதனை ஓட்டங்களும் முடிக்கப்பட்டு, மே 2026-க்குள் இச்சாலை முறைப்படி பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவுள்ளது. இது தென் மாவட்ட வர்த்தகர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்

சென்னையின் அடையாளமாக மாறப்போகும் இந்த 20 கி.மீ ஈரடுக்கு மேம்பாலத் திட்டம், நகரத்தின் மிக சவாலான கட்டுமானப் பணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி இத்திட்டத்தின் பணிகள் சுமார் 20 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன. துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை செல்லும் இந்த மேம்பாலத்தில், ஒரு அடுக்கு கனரக வாகனங்களுக்கும், மற்றொரு அடுக்கு பொதுப் போக்குவரத்துக்கும் ஒதுக்கப்படவுள்ளது. 2027 நவம்பர் மாதத்திற்குள் இத்திட்டத்தை முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிற முக்கியப் பணிகள்

இவை தவிர, சென்னை - சித்தூர் - தச்சூர் விரைவுச் சாலைத் திட்டத்தில் தமிழகப் பகுதியில் 28 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. மேலும், விபத்துகள் அதிகம் நடக்கும் தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'தொப்பூர் கணவாய்' பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் பைபாஸ் முதல் வேப்பம்பட்டு வரையிலான பணிகள் 98 சதவீதம் முடிந்துவிட்டன. இவை அனைத்தும் வரும் வாரங்களில் முழுமையாகத் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தின் இந்த மெகா சாலைக் கட்டமைப்புத் திட்டங்கள், வரும் காலங்களில் மாநிலத்தின் ஜிடிபி வளர்ச்சியை உயர்த்தவும், புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் மிக முக்கியக் காரணியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+