திறக்கப்பட்ட பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் வே.. காரில் போறீங்களா? விடாமல் கண்காணிக்கும் கண்கள்!
சென்னை: பெங்களூர் -சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் தமிழ்நாடு மற்றும் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச பகுதி இன்னும் திறக்கப்படவில்லை.
இந்த சாலையில் தற்போது வேகத்தை கண்காணிக்கும் ஏஐ சென்சார்கள், கேமராக்கள் உள்ளன. இவை கடந்த சில நாட்களாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இவை விடாமல் அங்கே செல்லும் வாகனங்கள் கண்காணிக்கும். சாலையில் பயணம் செய்பவர்களை விடாமல் இந்த கேமரா கண்காணிக்கும்.
காரில் வேகமாக செல்பவர்களால் அடிக்கடி இந்த சாலையில் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட தொடங்கி உள்ளன. கடந்த 3 வாரத்தில் மட்டும் 3 விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. இதில் 7 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த விபத்துகளுக்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளன.
சாலை புதியது என்பதால் பலரும் காட்டுத்தனமாக.. வேகமாக ஓட்டுகிறார்கள். அங்கே பைக் அனுமதி இல்லை என்றாலும் டோல் இல்லை என்பதால் பலரும் பைக்கில் செல்கின்றனர். அங்கே நடந்த 3 விபத்தில் 2 பைக் சம்பந்தப்பட்டது ஆகும்.
அங்கே இப்போது பெரிய அளவில் விளக்குகள் இல்லை. இங்கே இரவு நேரம் பயணம் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த சாலை பகுதியில் போதிய விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. ஒரு பக்கம் பணிகள் வேறு நடக்கின்றன.
அதேபோல் பொட்டல் காடாக இருப்பதால் இரவு நேரத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தற்போது கர்நாடக பகுதி மக்களால் இது நீண்ட டிரைவ்களுக்கும் ஜாலி ரைடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விபத்துகள் அதிக அளவில் அங்கே ஏற்பட தொடங்கி உள்ளன.

பணிகள் முடிக்கப்படவில்லை
ஆந்திரப் பிரதேசம் பகுதியில் இன்னும் முடிக்கப்படாத 260 கிமீ விரைவுச் சாலை ஆகஸ்ட் 2025 க்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 71 கிலோமீட்டர் நீளமுள்ள கர்நாடகப் பகுதி திறந்திருப்பதால், விரைவுச் சாலையைச் சுற்றி வசிக்கும் உள்ளூர் மக்களும், சாலை முடியும் வரை நீண்ட தூரம் சென்று திரும்பி வந்தவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர்.
ஹோஸ்கோட் அருகே ஜின்னகெரா கிராஸில் உள்ள ஒரு கோயில் காரணமாக இங்கே பணிகள் தாமதமாக நடந்தது. கோவில் இடமாற்றம் செய்யப்பட்டு, 400 மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி தற்போது முடிவடைந்தது. இதையடுத்து சாலை மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. சில சிறிய பணிகளைத் தவிர மற்ற பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது.
விரைவுச்சாலையில் மாலூர், பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களாவில் வெளியேறும் கிளை சாலைகள் உள்ளன. முழு நீளமும் இன்னும் முடிவடையாததால், டோல் சார்பாக எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. இந்த விரைவுச் சாலையை இப்போது உள்ளூர்வாசிகள் மற்றும் நீண்ட தூரம் செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த விரைவுச்சாலையானது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது மற்றும் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான 6 மணி நேரத்திற்கும் மேலாக உள்ள பயண நேரத்தை மூன்று மணி நேரத்திற்குள் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நான்கு வழிச்சாலையின் கட்டுமானம் கர்நாடகாவில் மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
தொகுப்பு 1: ஹோஸ்கோட் மற்றும் மாலூருக்கு இடையே, 27.1 கி.மீ.
தொகுப்பு 2: மாலூர் மற்றும் பங்கார்பேட்டை இடையே 27.1 கி.மீ
தொகுப்பு 3: பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களா இடையே 17.5 கி.மீ
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னையில் கட்டப்படும் புதிய பாலங்கள்.. முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications