ஆரம்பிச்சிட்டாங்க! தமிழ்நாட்டின் பெரிய எக்ஸ்பிரஸ் வே இதுதான்.. தொடங்கிய பணிகள்! இணையும் 2 துருவங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள மிகப் பெரிய எக்ஸ்பிரஸ் வேவிற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கான அலைன்மெண்ட் பணிகள் தொடங்கி உள்ளன. இதுதான் ஒரு சாலையை அமைப்பதற்கான அதிகாரபூர்வ முதல்கட்ட பணிகள் ஆகும்.
இந்த பணிகளின்படி, வடக்கில் உள்ள சென்னை மற்றும் தெற்கில் உள்ள மதுரை இரண்டையும் இணைக்கும் வகையில் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்படுகிறது. இந்த சாலை மதுரையில் தொடங்கி திருச்சி வழியாக சென்னை வரை அமைய உள்ளது. திருச்சி உள்ளிட்ட 5-6 நகரங்களில் மட்டுமே சாலை எக்சிட் ஆகும் வகையில் இந்த புதிய எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட உள்ளது.

இந்த சாலைக்கான ஆய்வு பணிகள் இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் இதற்கான டிபிஆர் அமைக்கப்படலாம் என்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெரிசலைக் குறைக்கும் முயற்சியில், சென்னை, திருச்சி மற்றும் மதுரை இடையே கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலையை ₹26,500 கோடி மதிப்பீட்டில் NHAI அமைக்க உள்ளது.
சென்னை டூ திருச்சி இடையிலான 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இதற்கான டிபிஆர் தயாரிப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளதாம். அதோடு சேர்த்து இந்த பணிகள் மதுரை வரை நீட்டிக்கப்பட உள்ளன. சென்னை-திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தாம்பரத்தில் இருந்து திருச்சி அல்லது தாம்பரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோயிலில் இருந்து கிரீன்ஃபீல்டு விரைவுச் சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சாலை வந்தால் சென்னை டூ மதுரை 6 மணி நேரத்தில் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை திருச்சி இடையிலான பயணத்தை 5-6 மணி நேரத்தில் இருந்து 2.30-3 மணி நேரமாக குறைக்கும். அதிகபட்சம் 4 மணி நேரத்தில் சென்று விடலாம். இதில்தன மதுரை கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. மொத்தமாக தாம்பரத்தில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோவிலில் துவங்கி, மதுரை வரை விரைவுச்சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 470 கிமீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
எக்ஸ்பிரஸ் வே ஏன் முக்கியம்?
தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதை சரிக்கட்ட இந்த சாலை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் பெரிய அளவில் எக்ஸ்பிரஸ்வே இல்லை என்று புகார்கள் வைக்கப்படும் நிலையில் புதிய எக்ஸ்பிரஸ்வே தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுரை - சென்னை இடையே புதிய எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 2024 நிலவரப்படி, 5,173 கிமீ (3,214.4 மைல்) நீளம் கொண்ட 48 எக்ஸ்பிரஸ்வேக்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் 8,772 கிமீ கட்டுமானத்தில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 1,021 கிமீ அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டுமே இருந்தன. பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் இருப்பதிலேயே குறைந்த அளவில் எக்ஸ்பிரஸ்வே சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் இன்னும் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானம் தொடங்கவில்லை. ஜூலை 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications