லைசன்ஸ் முதல் நம்பர் பிளேட் வரை.. தமிழ்நாட்டில் மாறிய 5 டிராபிக் ரூல்ஸ்.. வாகன ஓட்டிகளே உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து தொடர்பாக முக்கியமான 5 விதிகள் மாற்றம் அடைந்து உள்ளன. சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்ட விதிகளை இங்கே பார்க்கலாம்.
விதி 1: இனி லைசன்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது அதன்படி ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே ஆன்லைன் மூலம் பணிகளை மேற்கொள்ள முடியும்.

இதை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறையில் அனைத்து ஊழியர்களும் கணினி பயன்படுத்தும் வகையில் கணினிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு அரசு புதிய திட்டங்களை வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக 2,213 டீசல் பேருந்துகள், காற்று மாசைக் கட்டுப்படுத்த 500 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். ஜெர்மனி வங்கி நிதி உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் ஆர்டிஓ சைட்டில் எல்எல்ஆர் கட்டணம் செலுத்தும் வசதி நீண்ட நாட்களாக முடங்கிய நிலையிலேயே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எல்எல்ஆர் போட முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆதார் ஆத்தென்டிகேஷன் முடிந்தாலும் கூட பணம் செலுத்த முடியாத கடினமான சூழல் நிலவி வருகிறது.
விதி 2: 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை (Registration) நிறுத்தி வைப்போம் என்று தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில், 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்? 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி.
12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும். கவனம் தேவை பெற்றோர்களே என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
விதி 3: இனி புதிய கார்கள் மற்றும் பைக்குகள் வாங்கும் போது நிரந்தர நம்பர்கள் வழங்கும் வரை தற்காலிக நம்பர்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை கட்டாய பயன்படுத்த வேண்டும்.. தற்காலிக நம்பர்கள் இல்லாமல் கார்களை வெளியே கொண்டு வர கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஷோரூமை விட்டு வெளியேறும் கார்களுக்கு தற்காலிக பதிவு எண் இருக்க வேண்டும். சிறப்பு உரிமத் தகடுகளைப் பெறுதல், காரில் மாற்றங்களைச் செய்தல் அல்லது வெவ்வேறு மாநிலங்களில் பதிவு செய்தல் போன்ற விஷயங்களுக்கு இந்த தற்காலிக எண் உதவுகிறது.
விதி எண்: இந்த தற்காலிக எண்ணை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விதிகள் உள்ளன. சட்டத்தின் படி, அதை தெளிவாகக் காட்ட வேண்டும். மஞ்சள் பின்னணியில் சிவப்பு எண்களை வைத்திருப்பதே சரியான வழி. ஆனால், பல புதிய கார்களில் வெறுமனே மஞ்சள் காகிதம் அல்லது சிவப்பு எண்கள் கொண்ட ஸ்டிக்கர் உள்ளது, இது விதிகளைப் பின்பற்றவில்லை.
இவை முறையாக நம்பர் பிளேட் வடிவத்தில் இருக்க வேண்டும். மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி காரின் முன்பக்கத்திலும், பின்புறத்திலும் தற்காலிக எண்ணைக் காட்ட வேண்டும். தெளிவான நம்பர் பிளேட் தகடு இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது என புதிய மோட்டார் வாகனத் சட்டம் தெரிவித்துள்ளது.
இனிமேல் நம்பர் பிளேட்களில் for registration என்பதற்கு பதிலாக மஞ்சள் பிளேட்டில் சிவப்பு நம்பர் கொண்ட தற்காலிக நம்பர் இருக்க வேண்டும்.
விதி 4: மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்க்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும்.
மாநிலத்தின் ஒரு சில இடங்களில் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தடுக்கும் விதமாக சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் கேட்கப்படும் தங்களது கிளினிக்/மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விவரங்களை ஒரு முறை பதிவேற்றம் செய்து கொண்டு தங்களது பெயரினை ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வரும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை முடித்த பின்பு அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் சாரதி மென்பொருளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களின் மருத்துவச் சான்றினை பதிவேற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்.
மருத்துவர்கள் தங்களது விவரங்களை முதலில் உள்ளீடு செய்து தங்களுக்கான சாரதி மென்பொருளில் நுழைவினை ஒரு முறை உறுதி செய்துகொண்டால் போதுமானது. அவ்வாறு முறையாக சாரதி மென்பொருளில் பதிவு செய்து கொண்ட பின்னர் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றினை மருத்துவர்கள் எலக்ட்ரானிக் முறையிலேயே சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
எனவே தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை
இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழினை மின்ணணு வாயிலாக மட்டுமே
பதிவேற்றம் செய்ய இயலும். இதன் மூலம் போலி மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை முறைகேடாக பயன்படுத்தி வந்தது தடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும்
தங்களது பதிவுகளை உறுதி செய்வது குறித்தும் நாளை (11.06.2024) காலை 11.00 மணியளவில் மாநிலம்
முழுவதிலுமுள்ள அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஒரு செயல்முறை விளக்கம்
காண்பிக்கப்படும். அதில் கலந்துகொண்டு தங்களது பதிவுகளை இறுதி செய்யும் முறைகள் குறித்து
மருத்துவர்கள் அறிந்துகொள்ளலாம்.
விதி 5: வாகனங்களில் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பிளேட்கள் பொறுத்தப்படுவது கட்டாயம் ஆகிறது. இந்த பிளேட்களை தமிழ்நாட்டில் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
இந்தியாவில், ஏப்ரல் 1, 2019க்கு முன் விற்கப்பட்ட வாகனங்களில் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பிளேட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. எச்எஸ்ஆர்பி இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பதே தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க விதி. ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரையில் இதற்கு அபராதம் விதிக்கப்படும்.
ஒரு HSRP ஆனது எரிபொருள் வகையைக் குறிக்கும் வண்ண-குறியிடப்பட்ட லேபிளுடன் உள்ளது. நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பிப்பது என்பது ஆன்லைனில் முடிக்கக்கூடிய எளிதான செயலாகும்.
இந்த நம்பர் பிளேட்டுகளில் 3டி ஹாலோகிராம், ரிப்ளக்டிவ் ஃபிலிம், ஹலோ கிராம் 'இந்தியா' என்ற பெயர் மற்றும் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட வரிசை எண் போன்ற சிறப்பு அம்சங்கள் இதில் இருக்கும்.
அதேபோல் ஜூலை 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு விற்கப்படும் வாகனங்கள் இப்போது தானாக HSRP வகை எண் பிளேட்டுகளுடன் வருகின்றன. கர்நாடகா போன்ற பல மாநிலங்கள் இப்போது பிப்ரவரி 17, 2024 க்கு முன் பழைய வாகனங்களின் நம்பர் பிளேட்களை HSRP வகையில் மாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளன. வாகனத்தின் வகையைப் பொறுத்து 500 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
என்ன விதமான தட்டு; எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்பட்டு உங்கள் காருடன் இணைக்கப்பட்ட அலுமினிய உரிமத் தகடுதான் உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டு (HSRP) என்று அழைக்கப்படுகிறது. நீல நிற ஹாலோகிராமில் குரோமியம் அடிப்படையிலான அசோக சக்ரா சின்னம் HSRP உடன் சேர்க்கப்பட்டுள்ளது. HSRP தகடு 10 இலக்க PIN அல்லது நிரந்தர அடையாள எண், லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கீழ்-இடது மூலையில் பொறிக்கப்பட்டுள்ளது. 20 மிமீ நீளம் மற்றும் 20 மிமீ அகலம் ஆகியவை தட்டின் பரிமாணங்கள் ஆகும்.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications