உங்க வீட்டிற்கு வெளியே காரை பார்க் பண்றீங்களா? முதலில் இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் புதிய விதமான கிரைம் ஒன்று அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு முழுக்க பல விதமான கிரைம்கள், மோசடிகள் இருக்கின்றன. டெக்னாலஜி முன்னேற முன்னேற கிரைம்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. திருடர்களும் கூட தங்கள் திருட்டில் பல நவீனங்களை கடைபிடிக்க தொடங்கி உள்ளனர்.

போலீசால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு திருடுவது, சிசிடிவியில் மாட்டாமல் திருடுவது, குறிப்பிட்ட ஒரு சில பொருட்களை மட்டும் குறி வைத்து திருடுவது என்று திருட்டிலும் பல நவீனங்கள் தோன்றி உள்ளன. இந்த நிலையில்தான் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் புதிய விதமான கிரைம் ஒன்று அதிகரித்து வருகிறது.
அதன்படி வீட்டிற்கு வெளியே நிறுத்தப்படும் கார்களில் இருந்து இரவில் மொத்தமாக சக்கரங்களை திருடும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. வெறுமனே டயர்களை மட்டும் திருடாமல் மொத்தமாக சக்கரங்களை கழற்றி அப்படியே எடுத்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
பொதுவாக காரில் சென்சார்கள் இருக்கும். காரை தொடும் போது அதில் சத்தம் வரும். சில கார்களில் கதவில் மட்டும் சென்சார் இருக்கும். அதாவது கதவை திறக்க முயன்றால் மட்டும் சத்தம் வரும். இந்த நிலையில் காருக்கு அடியே சென்று வயர்களை கட் செய்து சென்சார்களை செயல் இழக்க செய்து.. அதன்பின் கார் சக்கரங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
சமீபத்தில் கூட சீர்காழியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் சக்கரங்களை மட்டும் குறிவைத்து திருடிய மர்ம கும்பல் ஒன்றை போலீசார் தேடி வருகின்றனர். வீட்டிற்கு வெளியே இரவு நேரத்தில் நிறுத்திவிட்டு காலை சென்று பார்த்த போது காரில் இருந்த 4 சக்கரங்களையும் காணவில்லை.

சத்தமே வராமல் வேலை செய்து இரவோடு இரவாக சக்கரங்களை கழற்றிவிட்டு சென்றுள்ளது திருட்டு கும்பல் ஒன்று. அங்கே சிசிடிவி இல்லாததும் திருடர்களுக்கு வசதியாகி உள்ளது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதோடு போலீசார் முக்கிய அறிவுரை ஒன்றையும் வழங்கி உள்ளனர்.
அதன்படி இனிமேல் வாகனங்களை வெளியே நிறுத்த வேண்டாம். அப்படியே நிறுத்தினாலும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications