உங்களிடம் பழைய வாகனங்கள் இருக்கா? உடனே இதை படிங்க.. மத்திய அரசு கொண்டு வரும் பயங்கர விதி!
சென்னை: இந்தியாவில் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை மாற்றப்பட உள்ளது. வாகனங்கள் வெளியேற்றும் மாசுபாட்டின் அடிப்படையில் வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கையை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
நாடு முழுக்க தற்போது 15 வருட பழைய வாகனங்களை அகற்ற கொள்கை உள்ளது. இதை தீவிரமாக கடைபிடிக்கவில்லை என்றாலும்.. 15 வருட பழைய வாகனங்களுக்கு எப்சி கிடைக்காது. இந்த நிலையில்தான் வாகனங்கள் வெளியேற்றும் மாசுபாட்டின் அடிப்படையில் வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கையை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.

வாகனங்களின் வயதை அடிப்படையாகக் கொண்டிருக்க இந்த புதிய விதி உருவாக்கப்படவில்லை என்று அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளன. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் (SIAM) வருடாந்திர மாநாட்டில் பேசிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளர் அனுராக் ஜெயின், இந்தியாவில் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை மாற்றப்பட உள்ளது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இனிமேல் வாகனங்களை அதிக மாசுடன் இயக்க முடியாது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்கிராப்பிங் கட்டாயம் என்ற கொள்கை இருப்பதால் மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. நான் எனது வாகனத்தை நன்றாகப் பராமரித்திருந்தால், எனது வாகனத்தை ஏன் ஸ்கிராப் செய்ய விரும்புகிறீர்கள்? நல்ல வாகனத்தை நான் ஏன் அகற்ற வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள். அதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை மாற்றப்பட உள்ளது.
எனவே இனிமேல் மாசுபட்டு புள்ளி ஒன்று உருவாக்கப்படும். இந்த புள்ளி அடிப்படையில்.. மாசு கட்டுப்பாட்டை தாண்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அவை 15 வருடத்திற்கு குறைவான வாகனமாக இருந்தாலும் கூட நீக்கப்படும். அதுவே 15 வருடத்திற்கு மேற்பட்ட பழைய வாகனங்கள் அதிக மாசை ஏற்படுத்தாமல், நலன் நிலையில் இருந்தால்.. அந்த வாகனங்கள் நீக்கப்பட்டது.
வாகனங்களின் வயதை வைத்து இனி அதை நீக்க மாட்டார்கள். பிஎஸ் 1, பிஎஸ் 2 என்று எந்த வாகனமாக இருந்தாலும் மாசு கட்டுப்பாட்டை தாண்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மாசு கட்டுப்பாட்டை தாண்டாத வாகனங்கள் அனுமதிக்கப்படும். இதற்காக மாசுபாடு கொள்கை ஒன்று கொண்டு வரப்படும். இதன் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.
இதற்கு என்று புதிய விதிகள் கொண்ட சான்றிதழ் வழங்கப்படும். அதில் மதிப்பெண்கள் இருக்கும். அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் இந்தியாவில் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை மாற்றப்பட உள்ளது. வாகனங்கள் வெளியேற்றும் மாசுபாட்டின் அடிப்படையில் வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கையை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
மாசுபாடு குறையும்: மாசுபாட்டை குறைக்கும் வகையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, புதிய வாகனங்கள் வாங்குவதற்கான தள்ளுபடியை அறிவித்து உள்ளார். பழைய வாகனங்களை விற்று அதற்கு அப்தில்லாக் புதிய வாகனங்களை வாங்கினால் தள்ளுபடி பெற முடியும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், எனது பரிந்துரையின் பேரில், பல வணிக மற்றும் பயணிகள் வாகன உற்பத்தியாளர்கள் இந்த புதிய வசதியை கொண்டு வந்துள்ளனர். அதன்படி முறையான சான்றிதழுடன் பழைய வாகனங்களை மாற்றி, அதற்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்கினால் அதற்கு தள்ளுபடி கொடுக்க முடியும்.
அதிக அளவில் தள்ளுபடி இதற்கு வழங்கப்படும். தூய்மையான, பாதுகாப்பான மற்றும் திறமையான வாகனங்கள் சாலைகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் விபத்துகள் குறையும், அதேபோல் காற்று மாசுபாடு குறையும். இதை மனதில் வைத்தே தள்ளுபடியை அறிமுகப்படுத்தி உள்ளோம், என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தேசிய நெடுஞ்சாலைகளில் விஐபி கலாச்சாரம் ஒழியும்! அதிகாரிகளுக்கு சுங்கக்கட்டண விலக்கு ரத்து! திட்டம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
டோல் கட்டணத்தைத் தவிர்க்க.. இதை மட்டும் பண்ணாதீங்க.. மத்திய அரசின் வார்னிங்.. கவனம்!












Click it and Unblock the Notifications