ஒரு நொடிதான்.. மேஜிக் போல கெமிக்கலை தூவி.. கார் கண்ணாடியை உடைத்து.. நடக்கும் கொள்ளை.. கவனம்
சென்னை: புதிய வகையில் கார்களுக்குள் உள்ளே இருக்கும் பொருட்களை திருடும் கும்பல் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக கார்களைத் திருடுவதற்கு திருடர்கள் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். பாரம்பரியமாக கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைவது முதல் சாவி இல்லாத திருட்டு வரை பல முறைகள் உள்ளன

பல்வேறு நுட்பங்களை பயன்படுத்தி காரின் தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி கார்களைத் திருட அல்லது அவற்றை உள்ளே இருக்கும் பொருட்களை திருடர்கள் திருடுவது தொடருகிறது. உண்மையில், கார் உதிரிபாகங்களுக்கான தேவை 2022 இல் அதிகரித்த காரணத்தால் வாகன திருட்டுகளும் அதிகரித்து வருகின்றன.
திருட்டுகள் நடைபெறுகிறது: வாகனங்களை திருடுவதை விட.. வாகனங்கள் உள்ளே இருக்கும் பாகங்களை குறி வைத்துதான் அதிக அளவில் திருட்டுகள் நடைபெறுகின்றன .
காவல்துறை திருட்டு: காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களின்படி 8 முக்கிய வகையான திருட்டுகள் உள்ளன:
சாவி இல்லாத கார் திருட்டு
ஹனோய் திருட்டு - அதாவது வீட்டில் கொள்ளையடிக்கும் போது உள்ளே சாவி இருந்தால் அதை வைத்து காரையும் திருடுவது.
டர்போ திருட்டு - காரின் கீ சிக்னலை கண்டறியும் கறிவு மூலம் செய்யப்படும் கொள்ளை.
டிரான்ஸ்பாண்டர் குளோனிங் - காரின் கீ சிக்னலை குளோனிங் செய்து பொய்யான கீ உருவாக்கி செய்யப்படும் கொள்ளை.
ஆன்-போர்டு டயக்னோஸ்டிக் காம்ப்ரமைஸ் - காரை மொத்தமாக ஹேக் செய்வது.
மின்னணு கட்டுப்பாட்டு மாற்றுதல் - உள்ளே இருக்கும் மின்னணு சாதனங்களை செயல் இழக்க செய்து கதவை திறப்பது, கீ இல்லாமல் கதவை செயல் இழக்க செய்து திறப்பது.
ஜிபிஎஸ் - பயன்படுத்தி காரை திருடுவது.
கும்பல்: இப்படிப்பட்ட நிலையில்தான் புதிய வகையில் கார்களுக்குள் உள்ளே இருக்கும் பொருட்களை திருடும் கும்பல் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து இந்த கும்பல் கார் உள்ளே இருக்கும் பொருட்களை திருடுகின்றனர். அதன்படி கல் வைத்து உடைக்காமல்.. ஒருவித கெமிக்கல் பொடியை தூவியவுடன், கார் கண்ணாடி சத்தமில்லாமல் உடைகிறது.
இப்படி எளிதாக சத்தம் இல்லாமல் கண்ணாடியை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களை திருடுகின்றனர். காரின் உள்ளே இருக்கும் பேக்- ஐ ஒருவன் திருடி செல்கிறான்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவருக்குமான எச்சரிக்கை பதிவு இது என்ற பெயரில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.
கோவை - சாய்பாபா கோவிலின், கேட் 2 அருகே, நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியில்... ஒருவித கெமிக்கல் பொடியை தூவியவுடன்,
— வீரா_MLA🔆🌿/ VEERA_MLA🔆🌿 (@star1_blak) December 25, 2023
கார் கண்ணாடி சத்தமில்லாமல் உடைகிறது...!
காரின் உள்ளே இருக்கும் பேக் - ஐ ஒருவன் திருடி செல்கிறான்... 🥸
அனைவருக்குமான எச்சரிக்கை பதிவு இது!! pic.twitter.com/QyhOtAFz92
கோவை - சாய்பாபா கோவிலின், கேட் 2 அருகே இந்த சம்பவம் நடந்ததாக போஸ்ட் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் உண்மையில் இது கோவையில் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இப்படி திய வகையில் கார்களுக்குள் உள்ளே இருக்கும் பொருட்களை திருடும் கும்பல் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கார்களையும் திருடலாம்: பழைய டைப் கார்களை இதே முறையை பயன்படுத்தி எளிதாக திருட முடியும். உள்ளே இருக்கும் பொருட்களை மட்டுமின்றி .. மொத்தமாக கார்களையும் திருட முடியும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.












Click it and Unblock the Notifications