லைசன்ஸ் வச்சு இருக்கவங்களுக்கு மிகப்பெரிய பாடம்! உச்ச நீதிமன்றம் போட்ட.. மிகப்பெரிய உத்தரவு! போச்சு
சென்னை: ஓட்டுநர் உரிமங்களின் பயன்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி.. அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டால், இடைப்பட்ட மாதத்தில் அந்த உரிமம் வைத்திருந்ததாகக் கருதப்பட முடியாது எனத் தெளிவுபடுத்தியது. பொதுவாக பல நுழைவு தேர்வுகளில் ஓட்டுநர் உரிமம் 2 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று விதி இருக்கும் நிலையில்.. இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இரண்டு முழு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாகும். உரிமம் காலாவதியானதற்கும், புதுப்பித்ததற்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டால், அந்த லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்ச்சியை முறித்துவிடும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
அதாவது ஒருவர் 2023 ஜனவரியில் லைசன்ஸ் வாங்குகிறார். அப்படி என்றால் 2025 டிசம்பரில் லைசன்ஸ் 2 வருடம் காலத்தை அடையும். அதுவே இடையில் 1 மாதம் லைசன்ஸ் செயலில் இல்லாமல் உள்ளது. அதாவது காலாவதியாகி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் அந்த லைசன்ஸ் renew செய்யப்பட்டாலும் கூட.. renew செய்யப்பட்ட நாளில் இருந்தே அந்த லைசன்ஸ் செயலில் இருந்ததாக கணக்கில் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
2022 ஏப்ரல்-மே மாதங்களில், தெலங்கானா அரசு 325 காவலர் (ஓட்டுநர்) மற்றும் தீயணைப்புத் துறை ஓட்டுநர்/இயக்குநர் பணியிடங்களை நிரப்ப அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான தேதியன்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இலகு ரக/கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தைத் 'தொடர்ச்சியாக' வைத்திருக்க வேண்டும் என்பதே தகுதிக்கான நிபந்தனை. தாது 2020 ஏப்ரலுக்கு முன்பு அவர்கள் லைசன்ஸ் வாங்கி அது ஆக்டிவாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அறிவிப்பு வெளியான காலத்திற்கு பின் க்ளின்சஸ் காலாவதியாகி, பின்னர் மோட்டார் வாகனச் சட்டம் அனுமதித்த ஓராண்டுக்குள் புதுப்பிக்கப்பட்ட சில விண்ணப்பதாரர்களை தெலங்கானா உயர் நீதிமன்றம் தேர்வுச் செயல்முறையில் பங்கேற்க அனுமதித்தது. உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, அது காலாவதி தேதியிலிருந்தே நடைமுறைக்கு வருவதால், தொடர்ச்சியில் இடைவெளி இல்லை என உயர் நீதிமன்றம் கருதியது. இதை ஆட்சேர்ப்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்தது.
உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
நீதிபதிகள் அஹ்சானுதின் அமனுல்லா மற்றும் எஸ்.வி.என். பட்டி கொண்ட அமர்வு, விண்ணப்பதாரர்களை தேர்வுச் செயல்முறையில் பங்கேற்க அனுமதித்த உயர் நீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்தது. மோட்டார் வாகன (திருத்தச்) சட்டம், 2019, முன்னதாக இருந்த 30 நாள் சலுகை காலத்தை நீக்கியுள்ளதால், உரிமம் காலாவதியான உடனேயே தகுதியிழப்பு ஏற்படும். மோட்டார் வாகன சட்டம் 1988 இன் பிரிவு 14, உரிமம் காலாவதியான பிறகு ஒரு நாள் கூட தொடர அனுமதிக்கவில்லை என சுட்டிக்காட்டியது.
நீதிபதி அமனுல்லா தனது தீர்ப்பில், உயர் நீதிமன்றத்தின் 'பின் தேதியிட்டு செயல்படும்' (relation back) கோட்பாடு தவறானது என நிராகரிக்கப்பட்டது. இந்த கோட்பாடு ஆவணத்தின் செல்லுபடியாகும் தன்மைக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஆட்சேர்ப்பு விதிகளின் கீழ் வாகனம் ஓட்டுவதற்கான தொடர்ச்சியான சட்டப்பூர்வ தகுதியைக் கணக்கிடுவதற்கு இது பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒரு ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி.. அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டால், இடைப்பட்ட மாதத்தில் அந்த உரிமம் வைத்திருந்ததாகக் கருதப்பட முடியாது எனத் தெளிவுபடுத்தியது. ஒரு வருடத்திற்குள் உரிமத்தை புதுப்பித்திருந்தாலும் இம்முடிவு பொருந்தும்.
"இடைவெளிக்குப் பிறகு உரிமம் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும், புதுப்பித்தல் பின் தேதியிட்டதாகக் கருதப்பட்டு, இடைப்பட்ட காலத்திலும் உரிமம் தொடர்ச்சியாகவும் செல்லுபடியாகும் என்ற கோட்பாட்டை ஏற்க முடியாது" என நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்தது.
-
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.. எல்லாமே அடுத்தடுத்து உயருகிறதே.. இனி கட்டுப்படுத்தவே முடியாது! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications