இனி டோல்கேட்டில் சில்லறை சத்தம் கேட்காது.. நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி மாற்றம்.. கவனம்!
சென்னை: "சில்லறை இல்லையே சார்.." - இனி இந்த டயலாக்கிற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் இடமே இருக்காது. வரும் ஏப்ரல் 10, 2026 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் (Cash) வாங்குவது முழுமையாக நிறுத்தப்பட உள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளது.

என்ன சொல்கிறது புதிய விதிமுறை?
இதுவரை ஃபாஸ்டேக் (FASTag) இல்லாத வாகனங்கள் ரொக்கமாகப் பணம் செலுத்தும்போது இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஏப்ரல் 10 முதல் 'கேஷ் கவுண்டர்' என்ற முறையே வரலாறாகப் போகிறது.
நோ கேஷ் (No Cash): சுங்கச்சாவடிகளில் இனி ஒரு ரூபாய் கூட ரொக்கமாகப் பெறப்படாது.
யூபிஐ (UPI) வசதி: ஒருவேளை உங்கள் வாகனத்தில் செல்லுபடியாகும் ஃபாஸ்டேக் இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்கள் செல்போன் மூலம் UPI (Unified Payment Interface) வழியாகப் பணம் செலுத்தலாம்.
அபராதம் இல்லையா? ஆனால் ஒரு 'ட்விஸ்ட்'!
ரொக்கப் பணத்தைத் தவிர்க்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றத்தில் ஒரு முக்கியமான விஷயம் ஒளிந்துள்ளது.
ஒரு வாகனம் சரியான ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்குள் நுழைந்து, UPI மூலம் கட்டணம் செலுத்தினால், அந்த வாகனத்திற்குரிய சாதாரண சுங்கக் கட்டணத்தை விட 1.25 மடங்கு (1.25 times) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
உதாரணமாக, ஒரு இடத்திற்கு சுங்கக் கட்டணம் 100 ரூபாய் என்றால், ஃபாஸ்டேக் இல்லாதவர்கள் UPI மூலம் 125 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
ஏன் இந்த மாற்றம்?
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை 100% உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "சில்லறை தட்டுப்பாடு", "மீதிப் பணத்திற்காகக் காத்திருப்பது" போன்ற பஞ்சாயத்துகளுக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பயணிகளே, உங்கள் ஃபாஸ்டேக்கில் போதிய பேலன்ஸ் இருக்கிறதா என்பதை இப்போதே ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், UPI ஸ்கேனரைத் தேடி எக்ஸ்ட்ரா பணம் கட்ட வேண்டியிருக்கும்!
டிஜிட்டல் பரிவர்த்தனைகள்
ரொக்கப் பணத்தை விட டிஜிட்டல் முறைகளுக்கு குறைவான கட்டணம் வசூலிப்பதன் மூலம், மக்களை ஃபாஸ்டாக் அல்லது யுபிஐ போன்ற டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு மாற தூண்டுவது அரசின் திட்டமாகும்.
ஆனால் வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதியும் மாற்றம் அடையும் என்கிறார்கள். 2026 ஏப்ரல் 1 முதல், ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் அனுமதி இல்லை, கேஷ் கொடுக்க முடியாது , ஒன்று டேக் பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் அபராததோடு UPI வழியாக செலுத்த வேண்டும் என்று புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது ஃபாஸ்டாக் இருந்தால் மட்டுமே அதை பயன்படுத்தி டோல் கேட்டை கடக்க முடியும். கேஷ் செலுத்தி.. ஃபாஸ்டாக்கை கடக்க முடியாது. அந்த அளவிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.
FASTag வருடாந்திர பாஸ்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயணத்திற்காக, FASTag வருடாந்திர பாஸ் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாஸ் பயணிகளுக்கு பணத்தை சேமிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பயணத்தை மேலும் வசதியாகவும், மன அழுத்தமின்றியும் மாற்றுகிறது. நாடு முழுவதும் சுமார் 1,159 சுங்கச்சாவடிகளில் இது செல்லுபடியாகும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) நான்கு நாட்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான FASTag அடிப்படையிலான வருடாந்திர சுங்கச்சாவடி அனுமதிகளை விற்பனை செய்து, ₹150 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. தமிழகம் அதிக எண்ணிக்கையிலான வருடாந்திர பாஸ்களை வாங்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்கள் உள்ளன.
கூடுதலாக, FASTag வருடாந்திர பாஸ்களைப் பயன்படுத்தி தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுங்கச்சாவடிகளில் அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக NHAI தெரிவித்துள்ளது.
வருடாந்திர சுங்க பாஸ் என்பது ஒரு ப்ரீபெய்ட் வசதியாகும். இதன் மூலம் தனியார் வாகன ஓட்டிகள் ஒருமுறை கட்டணம் செலுத்தி, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேகளில் உள்ள 200 சுங்கச்சாவடிகள் வரை இலவசமாக பயணிக்கலாம். ஒவ்வொரு பாஸின் விலையும் ₹3,000. இந்த வசதி கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்குக் கிடைக்கிறது.
இந்த பாஸ், செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு அல்லது 200 சுங்கச்சாவடி பயணங்களுக்கு, எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும். பயண வரம்பு எட்டப்பட்டதும், FASTag தானாகவே நிலையான பயணக் கட்டண முறைக்கு மாறும்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications