Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையின் மிக முக்கிய பகுதி.. இந்த சாலை பக்கம் போறீங்களா? தமிழக அரசு தந்த குட்நியூஸ்.. கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மோசமடைந்த ஆற்காடு சாலை மற்றும் மவுண்ட் பூந்தமல்லி சாலை ஆகிய முக்கிய சாலைகளின் பகுதிகள் மீண்டும் சீரமைக்கப்படவுள்ளன. வாகன ஓட்டிகளின் வசதிக்காக இந்தச் சாலைகள் மேம்படுத்தப்படும். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) தனது பணிகளை முடித்த பிறகு, நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்த இந்தச் சாலைப் பகுதிகளைச் சீரமைக்க டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, ஆரம்பத்தில் மழைநீர் வடிகால் அமைப்பில் உள்ள இடைவெளிகள் சரிசெய்யப்படும். "சேதமடைந்த வடிகால்கள் சீரமைக்கப்பட்டு, கழிவுநீர் வெளியேற்றும் இடங்களுடன் இணைக்கப்படும். மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதே எங்கள் நோக்கம். பாதிப்புக்குள்ளாகும் இடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதே நேரத்தில், சாலையின் மேற்பரப்பு சீரமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு வசதியாக மாற்றப்படும். முழுமையான சாலை மறுசீரமைப்புப் பணிகள் மழைக்காலத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும்" என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

automobile

சென்னை ஆற்காடு சாலை

ஆற்காடு சாலையில் 1.4 கி.மீ. நீளமுள்ள பகுதி ₹3.44 கோடி செலவில் சீரமைக்கப்படும். இதேபோல், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் 800 மீட்டர் பகுதி ₹5.20 கோடி செலவில் பழுதுபார்க்கப்படும். ஆற்காடு சாலையில், தடுப்புச் சுவர்களுக்கு அருகில் உள்ள இடைவெளிகளும் சரிசெய்யப்பட வேண்டும். மேலும், போரூரை இணைக்கும் முக்கியச் சாலையுடன் பக்கச் சாலைகள் சேரும் பகுதிகளும் சீரமைக்கப்படும்.

காமராஜர் சாலை, அண்ணா சாலை மற்றும் வெளிவட்டச் சாலையின் சில பகுதிகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. CMRL திட்டங்கள் முக்கியச் சாலைகளில் நடக்கும்போது, சிறிய சாலைகள் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் சேதமடைந்துள்ளன. இது குடியிருப்பாளர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தொந்தரவை ஏற்படுத்துகிறது. வாகனங்களும் சேதமடைகின்றன. மழைக்காலத்திற்குள் இந்தத் திட்டங்கள் அனைத்தும் நிறைவடையும் என்று நம்புகிறோம் என்று மக்களும் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை சாலை மாற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) 2,995 சாலைகளில் சீரமைப்பு பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. மொத்தம் 479.41 கி.மீ நீளமுள்ள இந்த சாலைகள், அத்தியாவசிய பொதுப்பணிகளுக்காக பல்வேறு சேவை அமைப்புகள், அரசு அமைப்புகள், மாநகராட்சிகள் பிரிவுகளால் தோண்டப்பட்டிருந்தன.

முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற சிறப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 3,987 சாலை பணிகள், 648.75 கி.மீ நீளத்திற்கு ₹489.22 கோடி மதிப்பில் மேம்படுத்த திட்டமிடப்பட்டிருந்தன.

சென்னை சாலைகள் சீரமைப்பு

அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, 2025 மே 20 மற்றும் ஜூன் 20 தேதிகளில் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. பெரும்பாலான பணிகள் இதுவரை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள திட்டங்கள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. செப்டம்பர் 15-க்குள் அனைத்து பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான சாலை தோண்டும் பணிகள் மெட்ரோ வாட்டர் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டன. இவை குடிநீர் குழாய்கள், கழிவுநீர் இணைப்புகள் மற்றும் மின் கேபிள்கள் பதிப்பதற்காக நடைபெற்றன.

தோண்டப்பட்ட சாலைகள்

இந்த ஆண்டு, 4,982 சாலைகளில் 859.98 கி.மீ தூரத்திற்கு தோண்டும் செய்ய மெட்ரோ வாட்டர் வாரியத்திற்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியது. இவற்றில், 3,266 சாலைகளில் (507.79 கி.மீ) பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் முடிந்து சீரமைக்க தயாராக உள்ளதாக 'தடையில்லா சான்றிதழ்' மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது. இவற்றில் 2,976 சாலைகளை (476.89 கி.மீ) மாநகராட்சி ஏற்கனவே சீரமைத்துள்ளது. இதேபோல், டான்ஜெட்கோவுக்கு 30 சாலைகளில் (4.72 கி.மீ) பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதில் 19 சாலைகளில் (2.52 கி.மீ) சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சீரமைப்பு நடவடிக்கைகளை வாராந்திர அடிப்படையில் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். அவரது ஆலோசனைப்படி, செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து சாலை சீரமைப்பு பணிகளையும் முடிக்க கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சென்னையில் பல்வேறு சேவைத் துறைகளின் ஒப்பந்ததாரர்கள் சாலைகளைச் சேதப்படுத்திவிட்டு முறையாகப் பழுது பார்க்காததால், சென்னை மாநகராட்சி (GCC) நகரத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை முழுமையாகத் தானே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதாவது சென்னையில் சேதம் அடைந்த சாலைகளை இனி சென்னை மாநகராட்சியை சரி செய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+