சென்னையில் 9 இடங்களில்.. நடக்க போகும் தரமான சம்பவம்.. வாகன ஓட்டிகளுக்கு.. குஷியான அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, வியாசர்பாடியில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகத்தின் (MTC) டிப்போவில், குறைந்த தளம்கொண்ட MTC மின்சார பேருந்துகளுக்கான 240kv டயரெக்ஸ் சார்ஜர்களை கொண்ட மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி, நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கு பொது இடங்களை அடையாளம் கண்டுள்ளது. நகர மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Automobile

மெரினா கடற்கரை பார்க்கிங், பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங், மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா, அண்ணா நகர் போகன்வில்லா பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, தி.நகர் மாநகராட்சி விளையாட்டு மைதான பார்க்கிங், தி.நகர் சோமசுந்தரம் பூங்கா, அம்பத்தூர் மங்கல் ஏரி பூங்கா மற்றும் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங் போன்ற முக்கிய பொது இடங்களில், அரசு நிலங்களில் இந்த மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

ரிலக்ஸ் எலக்ட்ரிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் லிமிடெட் (TNGECL) உடன் இணைந்து இந்த நிலையங்களை அமைக்கிறது. இவை இந்த ஆண்டு டிசம்பருக்குள் செயல்படத் தொடங்கும்.

சென்னை இ சார்ஜிங்

ஒவ்வொரு நிலையமும் சுமார் 500 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும். ஒரே நேரத்தில் இரண்டு கார்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதியுடன், நான்கு சக்கர வாகனங்களுக்கு விரைவு சார்ஜிங் வசதிகளும் இதில் இருக்கும்.

மாநிலம் முழுவதும் 500 EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க TNGECL மற்றும் ரிலக்ஸ் எலக்ட்ரிக் இடையேயான கூட்டணிக்கு இது வழிவகுக்கிறது. இந்த ஒன்பது நிலையங்கள் தமிழ்நாட்டின் தூய்மையான போக்குவரத்து முயற்சி திட்டத்தின் முதல் கட்டமாக செயல்படும். எளிதில் அணுகக்கூடிய பொது இடங்களில் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதால், குடியிருப்பாளர்கள் தங்கள் வாகனங்களை வசதியாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

"ரிலக்ஸ் எலக்ட்ரிக் மற்றும் TNGECL உடனான இந்த ஒத்துழைப்பு மூலம், சென்னை மாநகராட்சி, நகரத்தை நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைக்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "சென்னையின் முக்கிய பொது இடங்களில் நம்பகமான EV சார்ஜிங் நிலையங்கள் எளிதாக கிடைப்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம். இது தூய்மையான, ஆற்றல் திறன் கொண்ட நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மாநகராட்சியின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டுக்கு இணங்க அமைந்துள்ளது" என்றார்.

இது போக தமிழ்நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக, புதிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. இனிமேல், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இந்த புதிய விதிமுறையை அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இ சார்ஜிங் - கொள்கை மாற்றம்

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இ வாகனங்களுக்கு உகந்த பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, மின்சார வாகனங்களுக்கான ஹப்கள், டிஜிட்டல் சார்ஜிங் மேப் போன்ற புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+