சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்!
சென்னை: பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, "அங்க எப்படிப் போறது?" என்கிற கேள்விதான் பலரின் மத்தியிலும் பிரதானமாக இருந்தது. தற்போது அதற்கான விடையைத் தயார் செய்துவிட்டது தமிழக அரசு. சென்னையின் அடுத்த மெகா கனவுத் திட்டமான பரந்தூர் விமான நிலையத்தை, சென்னையுடனும் முக்கியத் தொழில் மண்டலங்களுடனும் இணைக்க இரண்டு முக்கியச் சாலை வழித்தடங்களை உருவாக்கத் திட்டமிடும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.

வழித்தடம் 1: பல்லூர் - சோகண்டி சாலை (விரிவாக்கம்)
முதல் கட்டமாக, சுமார் 23.8 கி.மீ நீளம் கொண்ட பல்லூர் - சோகண்டி மாவட்ட முக்கியச் சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளான் என்ன?: இந்தச் சாலையை 60 மீட்டர் அகலத்திற்கு (Right of Way) விரிவுபடுத்தத் திட்டம்.
மாற்றுப் பாதை: விமான நிலைய எல்லையை ஒட்டிச் செல்லும் வகையில், இதில் 9.2 கி.மீ தூரம் புதிய மாற்றுப் பாதையாக (Rerouted stretch) அமைக்கப்பட உள்ளது.
வசதிகள்: நான்கு வழிச் சாலையாக உருமாறப் போகும் இதில், இருபுறமும் சர்வீஸ் சாலைகளும் அமையவுள்ளன. நில எடுப்பைக் குறைக்கும் வகையில் சில இடங்களில் மட்டும் வடிவமைப்பில் சிறு மாற்றங்கள் செய்ய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
இதனுடன், சென்னை - பெங்களூரு விரைவுச்சாலையையும், பல்லூர் - சோகண்டி சாலையையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 58-ன் (சதுரங்கம் - திருத்தணி) ஒரு பகுதியும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு அகலப்படுத்தப்பட உள்ளது.
வழித்தடம் 2: ஒரகடம் - செய்யாறு டூ பரந்தூர் (புதிய இணைப்பு)
தென் சென்னை மற்றும் ஜி.எஸ்.டி சாலைப் பகுதிகளில் இருந்து விமான நிலையத்திற்கு நேரடி இணைப்பை வழங்குவதே இந்த இரண்டாவது வழித்தடத்தின் நோக்கம்.
தூரமும் பாதையும்: சிங்காபெருமாள் கோவில் முதல் பரந்தூர் வரை சுமார் 30.7 கி.மீ தூரத்திற்கு இந்தப் புதிய பசுமை வழிச் சாலை அமையும்.
இணைப்பு புள்ளிகள்: மாநில நெடுஞ்சாலை 58, சென்னை புறநகர் வெளிவட்டச் சாலை (CPRR) மற்றும் மணிமங்கலம் - ஓரகடம் - செய்யாறு தொழில் வழித்தடத்தை இது இணைக்கும்.
முக்கியச் சந்திப்புகளில் வாகனங்கள் தடையின்றி ஏறி இறங்கும் வகையில் 'கிரேடு செப்பரேட்டர்' (Grade-separated ramps) வசதியுடன் கூடிய நான்கு வழிச் சாலையாக இது திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டம் என்ன?
இந்தத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கும், நிலம் கையகப்படுத்துவதற்கும் தேவையான நிதியைத் தொழில் துறையே (Industries Department) வழங்கும் எனத் தெரிகிறது. இதற்கான பரிந்துரைகள் தற்போது தலைமைச் செயலாளரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், முதலில் பரிசீலிக்கப்பட்ட மூன்று திட்டங்களில், பெங்களூரு விரைவுச்சாலையை தேசிய நெடுஞ்சாலை 48-உடன் இணைக்கும் மூன்றாவது திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
பரந்தூர் ஏர்போர்ட் வெறும் விமானப் போக்குவரத்துக்கு மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்ற தொழில் பேட்டைகளின் வளர்ச்சிக்கும் ஒரு பெரும் 'பூஸ்ட்' ஆக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
1. ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் இண்டஸ்ட்ரியல் பெல்ட்
ஏற்கனவே 'தெற்காசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கப்படும் இப்பகுதி, புதிய இணைப்புச் சாலைகளால் (Singaperumal Koil to Parandur) நேரடியாக விமான நிலையத்துடன் இணையும்.
தாக்கம்: சரக்கு போக்குவரத்து (Logistics) எளிதாகும் என்பதால், புதிய தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகள் (Warehousing) இங்கு குவியும். இதனால் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.
2. சிங்கபெருமாள் கோவில் & ஜி.எஸ்.டி சாலை
தென் சென்னையில் இருந்து பரந்தூர் செல்வதற்கான பிரதான நுழைவாயிலாக சிங்கபெருமாள் கோவில் மாறப்போகிறது.
தாக்கம்: சென்னை புறநகர் வெளிவட்டச் சாலை (CPRR) மற்றும் ஒரகடம் வழித்தடம் சந்திக்கும் இடமாக இது இருப்பதால், குடியிருப்பு வளாகங்கள் (Apartments) மற்றும் வணிக வளாகங்களின் தேவை இங்கு அதிகரிக்கும்.
3. பல்லூர், சோகண்டி மற்றும் நெய்வேலி (காஞ்சிபுரம் அருகில்)
தற்போது அமைதியாக இருக்கும் இந்த கிராமப்புற பகுதிகள், 60 மீட்டர் அகலச் சாலை மற்றும் மாற்றுப் பாதைகளால் (Rerouted stretch) ஒரு புதிய நகரமாக உருவெடுக்கும்.
தாக்கம்: விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகள் என்பதால், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் ஏர்போர்ட் சார்ந்த சேவை மையங்கள் இங்கு அதிகளவில் உருவாகும்.
4. வாலாஜாபாத் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
மாநில நெடுஞ்சாலை 58 (SH 58) விரிவாக்கப்படுவதால், வாலாஜாபாத் சந்திப்பு ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக (Transit Hub) மாறும். காஞ்சிபுரம் பட்டு நகரத்திற்கும் விமான நிலையத்திற்கும் இடையிலான தூரம் கால அளவில் குறையும்.
-
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.. எல்லாமே அடுத்தடுத்து உயருகிறதே.. இனி கட்டுப்படுத்தவே முடியாது! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்! -
அண்ணா சாலை மேம்பாலப் பணி 68% நிறைவு.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் சவாலான கட்டுமானம் விறுவிறுப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்!












Click it and Unblock the Notifications