இந்த ரூட்டில் போறீங்களா? சென்னையில் மிக முக்கியமான சாலையில் செய்யப்படும் மாற்றம்.. கவனம்!
சென்னை: சென்னையை சுற்றி பல்வேறு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் புதிய சாலை ஒன்றிற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது.
சென்னை-தடா தேசிய நெடுஞ்சாலையில் மாதவரம் முதல் நல்லூர் வரையிலான 10 கி.மீ சாலை மாற்றி அமைக்கப்பட உள்ளது. 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள், ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக வரும் ஜனவரியில் டெண்டர் கோரப்பட உள்ளது.

இஇது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகையில், நான்கு வழிச் சாலையை சீரமைப்பதுடன், 9 கிமீ மற்றும் 1.7 கிமீ சர்வீஸ் லேன்களுக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெண்டர்: இந்த நீட்டிப்பு கடைசியாக 2018-19 இல் மீண்டும் சரி செய்யப்பட்டது, இந்த சாலையின் கொள்ளளவைத் தாண்டியதால், ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் கார்களைக் கொண்டு செல்வதால், புதிதாக அதன் மீது இன்னொரு சாலை போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கான பணிகள்தான் இப்போது தொடங்க உள்ளது.
நல்லூருக்கு அப்பால் உள்ள ஜனபஞ்சத்திரம் பகுதி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள சர்வீஸ் லேன் மற்றும் மெயின் ரோடுகளை சீரமைத்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெரியபாளையம் சந்திப்பில் இருந்து, குறைந்தபட்சம் 1 கி.மீ வரை சேதம் மிகவும் அதிகமாக உள்ளது. பள்ளங்கள் உள்ளன. இது ஒரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவிலான பராமரிப்புக்கு தகுதியானது.. ஆனால் அப்படி எதுவும் இங்கே செய்யாமல் மோசமான நிலையில் உள்ளது என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
தடா பகுதியில் இருந்து மாதவரம் செல்லும் போது மாலை நேரங்களில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. இந்த சாலையை கடக்க 20 நிமிடங்களுக்கு மேல் ஆகும். 1 கிலோ மேட்டருக்கு கூட 20 நிமிடங்கள் ஆகும். அதேபோல் புழல் முதல் மாதவரம் வரையிலான சாலையை அகலப்படுத்த வேண்டும். நிறைய கனரக வாகனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன.
மேலும் ரெட் ஹில்ஸ் அரிசி சந்தை, எண்ணூர் மற்றும் தடாவுக்குச் செல்பவர்கள் வேகமாக செல்ல இங்கே வசதி உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை போன்ற பல சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன, ஆனால் இந்த பாதை குறுகியதாக உள்ளது. அதனால் இங்கே பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈசிஆர் சாலை விரிவாக்கம்: இன்னொரு பக்கம் தினமும் பல லட்சம் வாகனங்கள் செல்லும் ஈசிஆர் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.24,435 கோடியில் மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து, மாமல்லபுரம் - மரக்காணம் இடையே பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்போது மரக்காணம் மற்றும் புதுச்சேரி இடையே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விரிவாக்கத் திட்டத்திற்காக தயாரிக்க ஒரு நிறுவனத்தை வாடகைக்கு எடுக்க NHAI டெண்டர் எடுத்துள்ளது. மொத்தம் 675 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலைகள் மேம்படுத்தப்பட்டு 4 வழி சாலையாக மாற்றப்பட உள்ளது.
மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரை, நான்கு வழிப் பாதை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில், தேவையான இடங்களில், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் தடையின்றி செல்ல கிரேடு பிரிப்பான்கள், மேம்பாலங்கள் மற்றும் வாகன சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகிறது. நகரங்களுக்கு இடையூறு விளைவிப்பதற்குப் பதிலாக வெளியே செல்லும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் பெரிய அளவில் வளைவுகள் இல்லாமல் நேராக செல்லும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான இயக்கத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஆய்வின் அடிப்படையில் இந்த சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த சாலை பணிகள் நடக்க உள்ளன. 8 பிரிவுகள் என்றால்.. தனி தனியாக இந்த 675 கிலோ மீட்டரை பிரித்து.. அதன்பின் அதில் சாலை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications