எலக்ட்ரிக் கார்-ல் இப்படியொரு பிரச்சனையா.. வாங்கும் போது தெரியாது பாஸ்.. போக போக தான் தெரியும்!
சென்னை: இந்தியாவில் மின்சார வாகனங்கள் (EV) வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் ரீசேல் (Resale) மதிப்பு குறித்து பலர் இன்னும் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே எலக்ட்ரிக் கார் வாங்கியவர்கள் அதை செகண்ட் ஹேண்ட் சந்தை.ில் விற்பனை செய்ய முயற்சி செய்யும் போது மிகவும் குறைவான மதிப்பு கிடைப்பதாக புலம்பி வருகின்றனர். இதற்கு என்ன காரணம்..? ஏன் இந்த நிலை உருவாகிறது..?
2021-ல் வாங்கிய ஒரு எலக்ட்ரிக் கார் 200 கிமீ மைலேஜ், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலிருந்து வெறும் 4-5 லட்சம் ரூபாயாக மதிப்பிடப்படுவதாக டிவிட்டரில் ஒரு பதிவு டிரெண்டாகி வருகிபது. இன்றைய கார் ரீசேல் மார்கெட்டில் தற்போதைய நிலை இதுதான் என பலரும் குறிப்பிட்டு உள்ளனர். வெறும் 4-5 ஆண்டுகளில் இவ்வளவு குறைவான மதிப்புக்கு வந்தள்ளது எலக்ட்ரிக் கார் வைத்திருப்போர் மத்தியில் அதிர்ச்சி அளித்துள்ளது.

எதனால் எலக்ட்ரிக் கார் ரீசேல் மதிப்பு குறைகிறது?
எலக்ட்ரிக் கார்கள் குறைந்த ரீசேல் மதிப்புக்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மொத்த கார் விற்பனையில் இன்னும் 4-5% மட்டுமே உள்ளன. இதனால், second-hand எலக்ட்ரிக் வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவாக உள்ளனர்.
மேலும், தொழில்நுட்ப முன்னேற்றம் வேகமாக நடைபெறுகிறது. புதிய எலக்ட்ரிக் மாடல்கள் அதிக மைலேஜ் மற்றும் குறைந்த விலையில் வந்துவிடுகின்றன. இதனால் பழைய மாடல்கள் விரைவில் பழையதாக மாறி, அதன் மதிப்பு வேகமாக குறைகிறது.
பேட்டரி பயம்
பழைய எலக்ட்ரிக் கார்கள் வாங்குவதில் மக்களிடம் இன்னும் முக்கியமான சந்தேகம் battery health பற்றியது. பலர், மொத்த பேட்டரியை மாற்ற வேண்டியிருக்கும் என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால், நிஜத்தில் எலக்ட்ரிக் பேட்டரிகளில் பிரச்சனை ஏற்பட்டால், சில செல்கள் மட்டும் மாற்றினால் போதும்.
ஆனால் இந்த உண்மை பொதுமக்களிடம் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இதற்கான செலவு எவ்வளவு என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. இதனால் second-hand எலக்ட்ரிக் சந்தையில் நம்பிக்கை குறைவாக உள்ளது என்ற கருத்தும் உள்ளது.
புதிய மாடல்கள்
புதிய எலக்ட்ரிக் மாடல்கள் அதிக ரேஞ்ச் மற்றும் குறைந்த விலையில் அறிமுகமாகும் போது, பழைய மாடல்களின் மதிப்பு தானாகவே குறைகிறது. இதுவே தற்போதைய எலக்ட்ரிக் சந்தையில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. 2-3 ஆண்டுகளுக்குள் EV தொழில்நுட்பம் மேம்படுவதால், காரின் மதிப்பு வேகமாக குறைகிறது. பெட்ரோல், டீசல் கார்களில் இதுநடக்காது.
Demand vs Supply பிரச்சனை
எலக்ட்ரிக் ரீசேல் மதிப்பு குறைவது முதலில் மோசடி அல்ல, இது முழுக்க முழுக்க demand vs supply அடிப்படையில் நடக்கிறது. வாங்குபவர்கள் குறைவாக இருக்க, விற்கும் வாகனங்கள் அதிகரிக்கும்போது, விலை குறைவது இயல்பானது.
மேலும், பழைய கார்களை வாங்குவோர் மத்தியில் Buyer Confidence இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இந்த நிலை மாற்றம் பெற, குறைந்தது 8-10 ஆண்டுகள் ஆகும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
முக்கிய ஆலோசனை
இப்போதைய சூழலில் எலக்ட்ரிக் வாங்கும் முன், அதன் ரீசேல் மதிப்பை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக எம்ஜி, மாருதி விட்டாரா ஈவி கார்களுக்கு அளிக்கப்படும் assured buyback திட்டத்தை வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்வது பாதுகாப்பான முடிவாக இருக்கும்.
எலக்ட்ரிக் வாகனங்கள் எதிர்காலம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தற்போதைய நிலையில் அது இன்னும் வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக இருப்பதால், முதலீட்டில் அதிக இழப்பு இருக்கும் என்பதை வாங்குபவர்கள் முன்கூட்டியே கணக்கில் கொள்ள வேண்டும். இதேபோல் எலக்ட்ரிக் கார் வைத்துள்ளவர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் பயன்படுத்திய பின்பு தான் சரியான மதிப்பு கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications